பக்கம்:மீனோட்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மீனோட்டம் யுள்ளவர்கள். அப்பாவைக் கோர்ட்டுக்கிழுத்து ஜீவனாம்சம் அது இது என்று பிடுங்கலாம்; ஆனால் யாருக்கு அவ மானம்? அப்படியே பிடுங்கினாலும் அவர் அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்ட வாழ்க்கையைத் திருப்பிப் பெற முடி யுமா? என்னென்னவோ பண்ணிப் பார்த்தார்கள். ஏதோ பெரிய தப்புப் பண்ணி விட்டாற் போல் காலில் விழுந்து, “மன்னிக்கணும்; எங்கள் பெண் உங்கள் வீட்டுக் கொட்டி லில் சாணம் பெருக்கி யெடுத்திண்டாவது இருக்கட்டும்; ஆனால் உங்கள் வீட்டில் இருக்கட்டும்- என்றெல்லாம் கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார்கள். அந்தக் காலத்தில் காசை விட மான ஈனத்தைத் தான் பெரிசாய் மதிச்சாள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. அதற்கப்புறம் என் தாய் நடத்தின ஒரு வாழ்க்கை யிருக்கு பாருங்கோ, அதை நரகம் என்று தான் சொல்லணும். அவள் வாழ்ந்தது வாழ்வல்ல, ஏதோ உயிரோடிருந்தாள்; அவ்வளவு தான். உயிரோடிருந்த வரைக்குமே அந்த உயிரை அவள் எப்படிச் சகித்துக் கொண்டிருந்தாள் என் பதே ஆச்சரியம் தான். இந்த ஊர்ப் பேச்சே அவளைக் கொன்று விட்டது. ஏன்னா, வந்த புதிசிலே ஏதோ த்ஸோ த்ஸோ கொட்டிண்டு இருந்தவா ளெல்லாம், அப்புறம் இந்த மனஸ்தாபம் தொடர்ந்துண்டே போகப் போக ஒரு தினுசாப் பேசஆரம்பிச்சுட்டாள். பாட்டிகளெல்லாம் காலை நீட்டிண்டு உட்கார்ந்துண்டு, நீட்டிய காலை உருவிண்டே, என்னடீ" தம்ப கோடியாத்துப் பெண் என்ன தான் வெகுளியாயிருந் தாலும், ஒரு பொறி நெருப்பு இல்லாமே இவ்வளவு புகையு. மாடி?’ என்று எங்க அம்மாவின் குலைந்த வாழ்க்கையை அலசும் சமயத்தில், அதுவும் பேச்சின் அர்த்தமும் வினை யும் தெரியாது நான் கேட்டதை அவளிடம் அப்படியே ஒப்பித்து அவளை அதுக்கு அர்த்தம் கேட்கையில், வேறு என்ன வினை வேண்டும்? 'குழந்தை முகத்தில் கோடி துக்கம் என்னும் பழமொழி யெல்லாம் உங்கள் மனைவியையும், என் தாயையும் போன்ற வர்களுக்காக ஏற்பட்டதில்லை. குழந்தை கையைக் காலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/129&oldid=870234" இலிருந்து மீள்விக்கப்பட்டது