பக்கம்:மீனோட்டம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13{} மீனோட்டம் திலே விழறேன், கிணத்திலே விழறேன், மண்ணெண் ணெயைக் கொட்டிக்கறேன்’னு அசட்டுப் பிசட்டுன்னு ஏதாவது பண்ணித்துன்னா? பிறந்த இடத்தைக் கெடுத்ததோ டில்லாம, புகுந்த இடத்தையும் விடியாமே பண்ணிடும்; எல்லாம் அதன் தாய் வயத்து மண் தானே!”... இந்தச் சிபார்சோடு நான் என்னத்தை உருப்படறது? அதனால்தான் படிக்கிறேன். ஆனால் படிப்பால் எங்களுக்கென்ன பயன்? கடவுள் எங்களைக் கொடியாய்ப் படைச்சிருக்காளே யொழிய மர மாய்ப் படைக்கல்லையே! எதையாவது நாங்கள் தொத்திண்டு தான் படரணும். நாங்களே ஊன்றி வளரப் பார்த்தால் உலர்ந்துதான் போவோம். உடலில் இத்தனை துடிதுடிப்பும், பதை பதைப்பும் பரதவிக்கையில், படிப்பையும் வெச்சிண்டு நான் என்ன செய்ய?’’ உணர்ச்சி வேகம் அத்தனையும் முகத்தில் குழுமுகையில் அவள் நெற்றிப் பொட்டு நரம்பு பட்பட்டென அடித்தது. சட்டென்று அவன் கையைப் பிடித்தாள். பேச்சு வேகத்தில் அவன் பக்கமாய் அவள் முகம் சாய்கையில், அவள் மூக்கின் அனல் அவன் முகத்தை எரித்தது. - 'அம்பி-அம்பி-என்னை மணந்து கொள், வாழ்க் கையை விட்டதால் உன் மனைவி மானம் வெட்கத்தை விட்டு விட்டாள்; வாழ்க்கை வேணுமென்கிறதால் நானும் மானம் வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன். என்னை மணந்து கொள்ளேன்! இன்னும் நம் வாழ்க்கையை உருப்படச் செய்ய எனக்குச் சக்தியிருக்கு. உன்னை என் மார்மேல் சாத்தி, மடிமேல் போட்டுக் கொண்டு, உன் உடல் நோயை யும், மன நோயையும் என்னால் மாத்த முடியும். நீ என்னைக் கல்யாணம் தான் பண்ணிக்கணும்னு எனக்கு அவசியமில்லை; ஆனால் நாம் உலகத்தின் விரோதத்தைச் சம்பாதிச்சுக்காமே, பிரியாமலும் இருக்கிறதுக்கு அந்தச் சடங்கை நான் ஏற்கிறேன்...” "ராஜம்...?’ அவனையுமறியாமல் அவ்வொரு வார்த்தை பெரும் வினாவாய்க் கிளம்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/131&oldid=870241" இலிருந்து மீள்விக்கப்பட்டது