பக்கம்:மீனோட்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 131 ராஜம்...? அவள் விதைத்த வினையை அவளேதான் அறுக்கணும்! தானும் வாழாமல் பிறத்தியாரையும் வாழ வொட்டாமல் செய்ய அவளுக்கு உரிமையில்லை. உன் வியர்த்தமான பாசத்துக்கு நீ ஆகுதியாகறத்துக்கு உனக்கும் உரிமையில்லை. நீ உன்னோடு போகவில்லை. உன்னை எனக்குத் தெரியும். நீ எல்லாருக்கும் உபயோகப்படுகி ; எனக்கும் பயன் படேன். என்னால் நீயும் பயன் படுவாய். உன்னில் எனக்கும் கொஞ்சம் கொடேன். நான் அந்தப் பாவி போல் இல்லாமல் பத்திரமாய், நீ என்னிடம் ெ ம் கு!! உன்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன். அதனால் உன்னை யும் காப்பாற்றுவேன்; என்னையும் காப்பாற்றிக் கொள்வேன். அம்பி-அம்பி!" அவனுக்குத்தலை சுற்றியது; கையில் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். நடந்ததிலிருந்து விடுபட முடியவில்லை; நடப்பது புரிய வில்லை. இருந்தும் நடக்கப் போவதைப் பற்றித் தான் எப்பொழுதும் யோசனை! மன்னிப்பு, மறதி, புது என்ன ஓட்டை வார்த்தைகள்; நடந்தது எப்பவும் நடந்தது தான். மாற்ற முடியாது, அழிக்க முடியாது. நடந்ததை மறக்க வேண்டுமானால் மனத்தின் உணர்ச்சி களை மரத்துப் போக அடித்துக் கொண்டால்தான் முடியும், அதுவோ முடியுமா? நடந்த வரைக்கும், ஊனம் ஊனம்தான், அதுவரைக்கும் முதல் தூய்மை கெட்டது கெட்டதுதான், எத்தனை எண்ணங்கள்... அவன் தலை சுழன்றது. ‘சாவித்திரி...எனக்கும் உடம்பு சரியாயில்லை...' “டாக்டரிடம் போவோம், வாருங்கள்...” 敬 :: 愈 வெளித் தாழ்வாரத்தில், சாவித்திரி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் சொல்ல இயலாத இரு குவியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது, இன்னமும் ஒரு மாதம் கழித் து. அவள் பேர் கொண்டதோர் நோன்பு வரப் போகிறதே, அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/132&oldid=870243" இலிருந்து மீள்விக்கப்பட்டது