பக்கம்:மீனோட்டம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மீனோட்டம் தாள். மஞ்சள் சரட்டைக் கட்டிக் கொண்டு, உருக்காத வெண்ணெயும் ஒரடையும் தட்டி வைத்தேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாமல் இருக்கணும்என்று விளக்கெதிரில் விழுந்து கும்பிடுவாள். ராஜமும் அதே மாதிரிச் சொல்லி, அந்த நோன்பை நோற்பாள் என்பதை நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அர்த்தம் பிரிந்து போன சடங்குகளின் விபரீதம் மிகவும் வேடிக்கையாய்த் தானிருந்தது. ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாமல் இருக்கணும் டாக்டரின் அறைக் கதவைத் திறந்து கொண்டு அம்பி மெதுவாய் வந்தான். அவன் முகம் சவமாய் வெளுத் திருந்தது. வாயில் உயிரற்றதோர் புன்னகை உறைந்து போயிருந்தது. அவன் முகம் பார்க்கச் சகிக்கவில்லை. “என்ன, ஒரு மாதிரியா...” அவள் கேள்வி முடியு முன்னர், லொக்கு லொக்கு” என்று இருமல் அவனைப் பிடித்துக் கொண்டது. கீழே விழாதபடி அவனைப் பிடித்துக் கொண்டாள். ஒரு கொத்துக் கோழை கழன்று, அங்குத் துப்ப வைத்திருக்கும் பாத்திரத்துள் விழுந்தது. கூட ஒரு நாலு சொட்டு ரத்தம், "ஐயோ இதென்ன? என்று அலறினாள் சாவித்திரி, அடி வயிற்றை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு. அவன் முகத்தில் அவ் வுயிரற்ற புன்னகை ஒரு நொடி உயிர் பெற்றது, -

      • ...to.” சாவித்திரி மேல் இருள் பொதிகள் மள மள வெனச் சரிந்தன.

அம்பி அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்தான். அசதியால் அவன் கண்கள் மூடின. பல வர்ணச் சக்கரங்கள், பொத்திய இமைத் திரையில் கர கர வென்று சுழன்றன. வாசலில், ந்ெருப்பணைக்கும் வண்டி கணகண'வென்று மணியலறப் பறந்தது. அந்தக் கோஷத்திடையில், அன்று காலை அம்மாவைப் பார்க்க வந்த மாமி, தை பிறந்துடுத்து-வழி' பிறந்துடும்பாருங்கோ-எல்லாத்துக்கும் தான் சொல்றேன்என்று கூறிய வார்த்தைகள் ஒலித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/133&oldid=870246" இலிருந்து மீள்விக்கப்பட்டது