பக்கம்:மீனோட்டம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயா ஐயா என் பெரிய தாத்தா. என் பாட்டனாருக்குத் தமையனார். ஐயாத்துரை, அய்யாத்துரை, ஐயா-ஊருக்கே ஐயாதாங்களும் உள்படத்தான். ஒரு தடவை அவரைப் பெரிய தாத்தா என்று முறை, வைத்துக் கூப்பிட்டு நான், அவரிடம் வாங்கிய அறையை நினைக்கும் போதெல்லாம் செவி இன்னும் ரொய்ஞ்ஞ்...' என் பாட்டனார் தமிழ்ப் பண்டிதர். குடும்பத்துக்கே சம்பாதிக்கும் பேர்வழி. அதாவது உத்தியோகம் பண்ணி-அவர் ஒருவர்தான். --- குடும்பம் பெரிது-வருவோர் போவோரும் அதிகம், எங்கள் வீடு ஒரு 'ஜங்ஷன்.” பதினைந்து வயதில் என் பாட்டனார் ஒரு கனவு,கண்டா střff LÈ • • • -நாங்களே கனவு காண்கிற கூட்டம்! பிள்ளையார் அவர் வாயில் ஒரு கற்கண்டைப் போட்ட மாதிரி. மறுநாள் காலையிவிருந்தே அவர் பாட்டாய்ப் பொழிகிறார். இந்தப் பாடல்கள் அனேகமாய்க் குலதெய்வத்தின் பேரில் தோத்திரங்கள். முழுக்க முழுக்க தோத்திரங்களுமல்ல; கெஞ்சல்கள் கொஞ்சல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/134&oldid=870247" இலிருந்து மீள்விக்கப்பட்டது