பக்கம்:மீனோட்டம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மீனோட்டம் மிஞ்சல்கள் மிதமிஞ்சல்கள் அதட்டல்கள் அலுப்புகள் மீண்டும் துதிகள், உருகல்கள். குடும்பத்தின் அவ்வப்போதைய தேய்வு, ஓய்வு. ஒய்ச்சல், ஒடுங்கல், ஓங்கல் நிலைமைக்கேற்றபடி, எல்லாவற்றிற்கும் காரணமும் அவள்தான். விமோசனமும் அவள்தானே! - எளிய சொற்களில் சிக்கலற்ற சிந்தனை. பட்டுக் கயிறின் உரம். முகத்தில் எப்டோ வெடிக்குமோ எனும் ஒரு வெகுளி. ஆனால் அருள்வாக்கு. அவர் சாகும்வரை புனைந்த கவிதைகள் அனைத்தையும், மணிமணியான தன் பொடியெழுத்தில் கறுப்பு மசியில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார். பின் சந்ததிகள் அந்தப் புத்தகத்தைப் பூஜையில் வைத்துக் காப்பாற்றி வந்தன; புத்தகமும் தலைமுறைகளைஅவைகளின் நம்பிக்கை, பக்தி, சிரத்தைக்கேற்ப காப்பாற்றி வந்தது. ஆனால், போகப் போகத் தலைமுறைகளைத்தான் தெரியுமே! ஆனால், முழுக்கவும் தலைமுறைகளைக் குற்றம் சொல்வ தற்கில்லை. மசி மங்கி, பக்கங்கள் பழுப்பேறி மஞ்சள் பூத்து, பாளம் பாளமாய் உடைந்து-தையல் கழன்று... ஒரு நாள் கிணற்றடியில் பேராண்டி ஒரு சின்னக் காகிதத் துண்டில் பற்பொடியை டப்பியிலிருந்து தட்டிக் கொண்டிருந்தான். நான் குளித்துக் கொண்டிருந்தேன். கறுப்புமசியில் எழுத்துக்கள் முத்து வடிப்பது நான் நின்றவிடத்திலிருந்தே தெரிந்தது. பயல் கையிலிருந்து பிடுங்கினேன். sہی بج

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/135&oldid=870249" இலிருந்து மீள்விக்கப்பட்டது