பக்கம்:மீனோட்டம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயா #35 அவள் என்ன தாராமல் இருப்பாளோ..? அவள் என்ன சத்தியம் மறந்தவளா? இரண்டு வரிகள்தாம். நெஞ்சு சுறீல்.’ எனக்கு அழுகை வந்துவிட்டது. அத்தனை கஷ்டத்திலும் அவ்வளவு நம்பிக்கை. நம்பிக்கை என்று சொன்னால்கூடப் போதாது. 'உனக்காச்சு...எனக்காச்சு...” என்ற உடும்புப்பிடி. என் தகப்பனார் புழுங்குவார். பண்டங்கள் மலிவாய்ச் செறிந்த அந்த நாட்களிலும் ராவிலோ-பகலிலும் கூட மாதம் ஒன்றிரண்டு தினங்கள் வலுப்பட்டினிகள் தவறாதாம். அம்பாள் கண் திறக்கிறோளோ இல்லையோ, அன்றாடம் அரிசிக் கூடைக்காரி யோகம்பாள் படியளந்தால்தான் உண்டு. அவளை விட்டால் கதியில்லை. பாவம் பார்த்து, அவள்தான் சற்று முன்னே பின்னே வாங்கிக் கொள்வாள். உல்ைபாட்டுக் குக் காய்ந்து கொண்டிருக்கும். அவளை எதிர்பார்த்துக் கொண்டு மன்னி கூடத்துக்கும் வாசலுக்குமாய் அலைவாள். வந்தால் வயிற்றில் பாலை வார்த்தாள். வராவிடில், அந்த உலை எங்கள் வயிற்றுக்கு மாறிவிடும்! நாங்கள் குழந்தைகள், மூலைக்கொருவர் உண்டு, பசிக்களையில் உறங்கிவிடுவோம். பெரியவர்கள் திண்ணையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு பழங்கணக்குப் பேசிக் கொண்டிருப் பார்கள், வயிற்றுக்கு வழியில்லை. என்ன சவுடால் வேண்டி யிருக்கோ? என் பாட்டனார் அம்புபோல், உயரமாய், நெட்டையாய் நெருப்புச் சிவப்பாயிருப்பார்-எப்பவும் சுத்தமாய் டீக்காய் உடுத்தி. தமிழ்ப் பண்டிதராயினும் அவருக்கு மாப்பிள்ளை வாத்தியார் என்று பெயர் வாரத்தில் ஒன்றிரண்டு நாள் இரவு வீடு திரும்ப மாட்டார். மன்னி மூஞ்சியைத் தொங்கப் போட் டுக் கொண்டிருப்பாள். மன்னி நல்ல மனுஷி. நல்ல கறுப்பு. ஆனால், அது வேறு கதை: ஐயா சந்தனக்குழம்பு நிறம். . ('ஆவாள் கூட்டம்ே வெள்ளைக்காரக் கூட்டம்னான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/136&oldid=870251" இலிருந்து மீள்விக்கப்பட்டது