பக்கம்:மீனோட்டம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மீனோட்டம் அகம்பாவம் பிடிச்ச கூட்டம், கோவிலே அவாள் குடும்ப சொத்து மாதிரி. அம்மன் சன்னதி யென்ன அவாளுக்குத் தான் குத்தகையா...? கோவில் குருக்கள் முதற்கொண்டு அவாளுக்குத்தான் கும்மியடிக்கிறார். தீபாராதனைத் தட்டு முதல் மரியாதை அவாளுக்குத்தான். மண்டகப்படிகாரர் கூட இரண்டாம்படி, அகம்பாவம் பிடிச்ச கூட்டம்') முகத்தில் எப்பவும் மூணு மாதத்தாடி. சடைத்தலை. அழுக்கு. அழ்-ழ்-ழுக்-கு- பொடிப் பழக்கம் வேறெ. ஐயாவுக்குக் குளியல் என்றாலே அலெர்ஜி," அவருக்கு இருபது வயதிலேயே, மனைவி தலைப் பிரசவத் தில் இறந்து விட்டாள். குழந்தையும் தக்கவில்லை. யார் யாரோ என்னென்னவோ சொல்விப் பார்த்தும், அவர் மறு மணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அதனால் கடைசி வரை அவர் பெயர் கறைபடவில்லை. என் பாட்டிதான் எல்லாருக்கும் மன்னி, மத்தியான வேளையில், சமையலறையில் பானைகள் குடையல் சத்தம். எலியில்லை. இது தனியாகத் தெரியும். "யாரது...” -மன்னி வரும் காலடி கேட்டு-வெல்லப் பானையுள் விட்ட கையை எடுக்க நேரமிருக்காது. பானையோடு ஐயா விழுந்தடித்துக் கொண்டு கொல்லைப்புறமாய் ஒடுவார். நாங் களும் பின்னாலேயே ஓடுவோம். எங்கள் பாடு மோக்ளா. "ஐயா... ஐயா...! வியாழக்கிழமை உங்கள் அம்மா திவசம்!”-மன்னி கத்துவாள்; வேறு வெல்லம் இல்லை!" "பரவாயில்லை. என். அம்மாவுக்குத் தித்திப்புப் பிடிக் காது!’-ஒரு கையில் பானை. மறுகையை ஆட்டிக்கொண்டே ஐயா எதிர்க்குரல் கொடுத்துக் கொண்டே ஓடுவார். மாலை திரும்பியதும் எங்களுக்குத் திட்டு உதை. மன்னி வயிற்றெரிச்சலில் கத்துவாள், அழுவாள். ஐயா பதிலே பேசமாட்டார். திருதிருவென்று விழித்துக் கொண்டு, கூடத்தில் குந்திட்டு உட்கார்ந்த வண்ணம் சுட் டாந்தரையில் சுட்டு விரலால் என்னவோ எழுதிக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/137&oldid=870253" இலிருந்து மீள்விக்கப்பட்டது