பக்கம்:மீனோட்டம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ցաո 137 டிருப்பார். எப்பவும் அவருடைய பச்சாத்தாபப் போஸ்’ அதுதான்! - திவசத்துக்கு முதல் நாள், வயிற்றெரிச்சலில் திட்டிக் கொண்டே மன்னி வெல்லப்பானையைத் திறந்தாள். "ஐயோ, இதென்னடி மாயம்? இல்லி பில்லி சூன்யமா? ஐயா...! ஐயா...' முன்னைவிட வெல்லம் கூடுதலாகவே யிருக்கும். நல்ல வெள்ளை உருண்டை வெல்லம். ஐயா பதிலே பேசமாட்டார். கூடத்தில் குந்திட்டு உட்கார்ந்த வண்ணம் கட்டாத் தரையில் சுட்டு விரலால் எழுதிக் கொண்டிருப்பார், முகத்தில் ஒரு புன்னகையின் சோடைகூட இருக்காது. அதே திருட்டுமுழி. ஊரான் லீட்டு மரத்திலேறி, இளநீரைப் பறித்துக் குடிப் பார். எங்களுக்கும் கொடுப்பார். தாடி நுனியில் இளநீர் சொட்டும். எப்பவும் ஓர் அவசரம். சொந்தக்காரன் பார்த்து ஆட்சேபித்தால், அவன் செவி கூசி.செவி பொத்திக் கொள் ளும் வகையில் வாயில் வந்தபடி வைவார். என்ன தைரியம் உனக்கு? என்னவோ அடிக்கிறாப் போல் வரையே...எப்படிக் காலம் கெட்டுப் போச்சு பார்த் தியா? இந்தத் தென்னை மரத்துக்கு எப்படித் தண்ணீர் பாய்ச்சி, எருப்போட்டு நீ காப்பாத்தினேன்னு எனக்குத் தெரியாதா...? என்னடா நீங்கள் எல்லாம் அப்பன் சேர்த்து வெச்சுட்டுப் போனதை அழிக்கிறவங்க தானேடா? உன் அப்பன் இருந்தால் நான் மரமே ஏற வேண்டாம். இளநீரைச் சீவி பொக்க மட்டும் கத்தியைப் பக்கத்திலேயே வெச்சுட்டு, கைகட்டி எட்ட நிப்பான். டேய் இந்த வாழைப் பட்டைக் கத்தியைப் பார்த்தாயா? உன் அப்பன் கொடுத்ததுதான். அவன் நினைவா வெச்சிண்டிருக்கேன். இதோடு பிடி மூணு தடவை கயண்டாச்சு, ஒரு தடவையேனும் ஆணி அடிச்சுக் கொடுக்க உனக்குத் துப்பு உண்டா...? "ஏஞ்சாமி என் சொத்துக்கு உனக்குக் கணக்குச் சொல்லியாகனுமா...? என்னவோ கேட்டால் என்னென் னவோ பேசிகிட்டுப் போறியே? தமிழ் அய்யா வீடுன்னு 9سس-uf

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/138&oldid=870254" இலிருந்து மீள்விக்கப்பட்டது