பக்கம்:மீனோட்டம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 மீனோட்டம் பார்க்கறேன். இல்லாட்டி..?' 'இல்லாட்டி என்னடா பண்ணுவே? போலீசுலே பிடிச்சுக் கொடுப்பையாக்கும் அவனும் தைரியமாய் என்னை இழுத்துண்டு போவானாக்கும்...நீ உன் பெண்டு பிள்ளை யோட வாசல்லே நின்னு பார்த்து மகிழ்வாயாக்கும்! ஏய்” நான் உன் மாதிரி ஏத்தப் பாட்டுப் பாடி வேணா இறைச் சிருக்க மாட்டேன். ஆனால், என்னிக்கேனும் பல் தேய்ச்சு இதே மரத்தடியில்-இது கன்னாய்ருந்தப்போ வாய் கொப் பளிச்சிருப்பேன். அதற்குமேல் ஜலமும் உன் இளநீரில் இல்லே, உப்புக் குரும்பை. இதுக்கு உனக்கு இவ்வளவு வாய் கிழியறது...!” "ஐயா எருமை மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பார். கட்டி லுக்குக் கயிறு பின்னுவார். வெகு அழகாகக் கூடை முடை வார். குடிசைக்கு ஒலைக் கூறை வேய்வார். வாழைப்பட்டை யைச் சீவிச் சுரண்டி இலை தைப்பார். இடுப்பில் எப்பவும் வாழைப்பட்டைக் கத்தி செருகியிருக்கும். பளப்பள...” கோலம் போட்டால் இன்று முழுக்கப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்! பொம்மனாட்டிகள் பார்த்துக்கொண் டிருப்பார்கள். எடுபிடி வேலைக்கு ஐயாவைக் கூப்பிடு! ஆனால், ஐயாவை நம்ப முடியாது. இஷடமில்லாவிட்டால். இடை யில் அப்படியே விட்டுப் போய் விடுவார். படிப்பு வாசனையும் அறவே கிடையாது. உருப்படியாக உதவாத ஐயா, ஆனால், யாருக்கும் வேண்டியவர், ஐயா, பண்ணுலதெல்லாம அக்ரமம்; ஆனால் பொருட்டாய் எடுத்துக் கொள்ள மாட்ட்ார்கள். அள்ளிச் செருகி அடிகனத்த வேட்டியின் தலைப்பைப் பிடித்த வண்ணம் அடிமேல் அடி வைத்து ஐயா உள்ளே அறுழைவார். 'அவன் இருக்கானா...? அவன் என் தாத்தா. வேட்டித் தலைப்பைக் கீழே விட்டதும் பச்சைப் பசே லென்று அப்போதுதான் பறித்த கத்திரிக்காய் கூடத்தில் நாலா பக்கமும் சிதறி உருண்டோடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/139&oldid=870256" இலிருந்து மீள்விக்கப்பட்டது