பக்கம்:மீனோட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி 13 எனக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. சனியன்களா வெளியில் போய்த் தொனையுங்கள். தெருவில்போய் குவையுங்கள்: கதவைப் படிரெனச் சாத்துகிறேன். எனக்கு மூக்க இறைக்கிறது. போன வாரங்கூட டாக்டர் சார் நீங்கள் ஜாக்கிரதையா யிருக்கணும். உங்கள் வயசுக்குக் கெள்ண்ட் அதிகம். உப்பையும் ராச் சோறையும் உதறுங்கள். இதுவரை மொஷாக்கிய கிழங்கும், பருப்புசலியும், வளையம் வளைய மாய் வாழைக்காய்தான் அப்படியே எண்ணையில் இறக்கி காரம், புளியோடு ப்ரை தின்னதும் போறுமே, அப்புறம் 'டெம்பர் டெம்பர்!! இது உங்களுக்கு என்னுடைய இருபத்தி எட்டாவது காஷன்-இந்த வாத்து கோழி விக்கற வன் பார்த்தேளா? அப்படியே காலைக் கொத்தாப் பிடிச்சு தலைகீழாத் தூக்கிண்டு போவன். அதுபோல அடிச்சுடுத் துன்னா அதோகதிதான். ஐயோ பாவம்னு புரட்டிப் போடக் கூட இந்தக் காலத்தில் யாருக்கும் நேரம் கிடையாது, தெரியு மோன்னோ! பயத்தில் கண் இருட்டுகிறதோ? அறையில் நான் விஸ்த்தரித்த சொகுசு இருள் புத்தகங் கள், ரேடியோகிராம், தர்பாரிகானடா, மகிழம்பூ TSR இத்யாதிகளைத் தேடுகிறீர்களா? உங்களை யார் தேடச் சொன்னது? நான் தேடவில்லையே! எல்லாம் நான் நினைத்துக் கொண்டதுன்னா! உங்கள் பங்குக்கு எரிச்சலைக் கிளப்பறேளா? இந்தச் சத்தமும் ரகளையுமில்லாமல், அக்கடான்னு ஏகாந்தமா மூணு மாசம் எங்கேனும் கண் காணாமல் தொலைய மாட்டோமே? இதோ கேட்டது கிட்டி, அவர்கள் அங்கே நான் இங்கே தனிமையாக திகைப்பூண்டு மிதித்தவனாய் நடந்து கொண் டிருக்கிறேன். நடந்து கொண்டேயிருக்கிறேன். இன்று தோற்றாலும் நாளை நமதே என்கிற நம்பிக்கை யில் கர்ர்-புர்ர்-ஒன்றையொன்று கடித்துக் குதறிக் கொண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/14&oldid=870258" இலிருந்து மீள்விக்கப்பட்டது