பக்கம்:மீனோட்டம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量4{} மீனோட்டம் திணறிப் போகும். உண்ட சிரமம் சாப்பிட்ட இடத்திலேயே சாய்வோம், கைகாயும், அடே கையலம்புங்கடா...கை காய ஆகாதுடா' “சரிதான் போ மன்னி' ஆனால், ஐயாவின் பாம்பு வயிற்றில் அவ்வளவு உணவும் எங்கே பாக் ஆகுமோ...? வயிறு குழியும். நாங்கள் வாண்டுகள் எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல், ஐயாவின் வாழ்க்கைக்கதியே இப்படித்தான். சொன்னதையே நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலும் ஐயாவின் ப்ரபாவம் எங்களுக்கு அலுக் காது. எங்களுக்குச் சரியாக எங்களோடு பேசிச் சிரித்து விளையாட வேறு யார்...? பிறகு இது ஒரு நீண்ட பிறகு, - பிறகு ஐயாவுக்கு மெய்க்காவல் வேலை கிடைத்தது. அதாவது கோவில் வாட்ச்மேன். வேலை ஒன்றும் காலியா யில்லே... ஐயாவுக்கென்றே வேலை போட்டுக் கொடுத்தார் கள் இதற்குத் தனிப்பட்ட காரணங்களை எப்படிக் கணக் கெடுப்பது...? உள்ளூர் என்பது ஒன்றாயிருக்கலாம். எங்கள் குடும்பத்துக்கே கோவில் மேல் இருந்த அலாதி பக்தி, அதனால் தர்மகர்த்தாக்களுக்கு இந்தக் குடும்பத்தின் மேல் உள்ள தனி மதிப்பு, அம்பாளைப் பள்ளியறையில் கொண்டு போய்விட்டு, அங்கு தன் பாட்டுக்களைத் தன் இனிய வெண்கலக் குரலில் பாடி வீட்டுக்கு வந்தபின்தான் தாத்தா சாப்பிடுவார். இந்த மனுஷன் ஐயாத்துரை உதவாக்கரையா இத்தனை நர்ள் கழிச்சர்ச்சு. இப்போதிருந்தேனும் தானும் ஏதோ வேலைக்குப் போனோம்னு ஒரு திருப்தி அவருக்குக் கிடைக் கட்டுமே என்றும் இருக்கலாம்! தவிர முக்யம், மனுஷனுக்குத் தைரியம் ஜாஸ்தி, பயம்ன்னா வீசை என்ன விலை? என்பார். ஒருமுறை பக்கத்துரில் டென்ட் சினிமா பார்த்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/141&oldid=870262" இலிருந்து மீள்விக்கப்பட்டது