பக்கம்:மீனோட்டம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயா i41 நள்ளிரவில், கழனிக் காட்டில் குறுக்கு வழியில் திரும்பி வருகையில் புஸ்.ஸ்.ஸ்...' காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது என்பார்கள்! ஆனால், காலைச் சுற்றினதைப் பிய்த்துத் தூர வீசியெறிந்த அந்தக் கண்ணிமைக்கும் நேரத்துக்கும் குறைந்த அந்த சுருக்கை, அந்தத் தீரத்தை... நாங்கள் பெருமையடித்துக் கொள்ளவில்லை, எங்கள் ஐயா என்பதால் ஒண்ணுக்கு ஒன்பதாய்க் கப்ஸ் அளிக் கிறோம் என்பீர்கள். நடந்ததுக்கெல்லாம் ஐயாவுடன் சினிமா வுக்குப் போனவர்கள் அத்தனை பேரும் சாட்சி. தானே சினிமா போக ஐயாவிடம் துட்டு ஏது...? மடியை உதறினால்: அதில் முடிச்சிருந்தால், அது ஞாபக முடிச்சாயிருக்கும்! எங்களைப் பொறுத்தவரை. ஐயாவின் சம்பளம் எப்படி யேனும் போகட்டும், வாஸ்தவத்தில் சம்பளத்துக்கும் ஐயா வுக்கும் சம்பந்தம் ரசீதில் கட்டை விரல் பதிவோடு சரி, தொகை ஆபீஸ் பையன் மூலம் நேரே மன்னியிடம் போய் விடும். ஐயாவின் இஷ்டமும் அதுதான். நான் பணத்தை வெச்சுண்டு என்ன பண்ணப் போறேன்?” மண்டகப்படி நைவேத்தியத்தை மடப் பள்ளியிலிருந்து சன்னிதானத்துக்குக் கொண்டுவந்து வைத்தால் ஐயாவுக்குச் சில்லறை உண்டு, டேயப்பா, என் பொடிக்கு ஏராளம்!” நைவேத்தியத்தில் வேறே வெட்டு, தவிர இரண்டு வேளையும் வேளைக்கு இரண்டு பட்டை... இப்போ மாதிரி கும்பி, உசிரே போய் இருக்காது. கடுகு, மிளகாய் தாளித்து, தயிரைத் தாராளமாய்த்தெளித்திருக்கும். இளக்கி, நாலுபேர் தாராளமாய்ச் சாப்பிடலாம். எங்கள்பாடு வேட்டைதான். வீடே இப்போ முன்னைவிடப் பச்சைதான். நாளடைவில் நாங்களே மூஞ்சியைத் துரக்கிக் கொள்ளு மளவுக்கு எங்களுக்கு மிதப்பாகி விட்டது. "என்ன ஐயா, தினமும் சுண்டல் தானா? வடையும் வெடக்குவெடக்குன்னு பாயசத்தை ஆள் மூலம் கூஜாவில் அனுப்பிச்சுடுங்கோளேன்! நீங்கள் கொண்டுவரத்துக்குள் ஆறிப் போயிடறது-- ஐயா ஏதேனும் மாறுதலாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/142&oldid=870264" இலிருந்து மீள்விக்கப்பட்டது