பக்கம்:மீனோட்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மீனோட்டம் கிடையாதா? பஞ்சாமிர்தம்-ஜிஞ்சாமிர்தம்-இல்லை? அதை நீங்கள் அங்கேயே பார்த்துடறேளா...?” மாட்டார். எங்களுக்குத் தெரியாதா? ஐயாவுக்கு ட்யூட்டி மாலை ஆறு மணிக்குத் தொடங் கும். கிழங்குபோல் வெள்ளியில் பூணும் கொண்டையும் போட்டதடியை வேலைக்கு வந்ததும் வழங்கி விட்டு, இரவு பத்துக்குக் கோயில் கணக்காபீஸ் மூடும்போது பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். ஒரளவுக்கு ஒழுங்காய்க் குளித்து முகமும் மழித்து, முடியை வாரி, வெள்ளை ஆடை-ஈதெல் லாம் சேர்த்து முதன் முதலாய் நாங்கள் ஐயாவைப் பார்க்கை யில் எங்களுக்குத் திகைப்பாகி விட்டது. ஐயா துரை தன் முழுப் பெயராகி விட்டார்! சிப்பந்திகளும் போய், கோவில் காலியாகி விட்டபின், உள்பிராகாரக் கதவைப் பின் தாளிட்டுக் கொண்டு, வெறுங் கழியுடன் ஐயா உள்ளே ரோந்து சுற்றுவார்; அல்லது நடராஜா சன்னதியில் ஒரு தூணடியில் துண்டை விரித்துப் போட்டுத் துரங்குவார். அல்லது கொட்டு கொட்டென விழித்துக் கொண்டிருப்பார். உயர வெளவாலும் துரிஞ்சலும் வேட்டையாடும். சிலைகளின் மேல் பெருச்சாளி ஒடும். நடராஜா அடுத்த திருவாதிரை வரை, கட்டிய பஞ்சக்கச்சம் நலுங்காமல், முகத்தில் அவருடைய ரகஸ்யம் புன்னகை தவழ, ஆனந்தமாய் நொண்டிக்கொண்டிருப்பார். எங்கேயோ ஜலம் சொட்டுச் சொட்டு-மஹிமையாயிருக்கலாம். சரியாக மூடாத குழாயாயுமிருக்கலாம். எல்லாம் அவரவர் எண்ணத் துக்கு ஏற்றபடி அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி. ஒரு நாள் ஐயா. ட்யூட்டி முடிந்து வழக்க நேரத்துக்கு வீடு திரும்பவில்லை. முதல் நாள் வெள்ளிக்கிழமை. கோவில் சிப்பந்திகள் எல்லாருக்ருமே அன்று வேலை கசர் வாங்கும் அரை டஜன் அபிஷேகங்களுக்குக் குறையாது. தனித்தளி அலங்காரம், நைவேத்தியம், ஸஹள்ரநாமம் ஒயும்போது நிசி தாண்டி விடும். கடைசி அலங்காரத்தைக் கலைக்கத் தென்பு இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/143&oldid=870265" இலிருந்து மீள்விக்கப்பட்டது