பக்கம்:மீனோட்டம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 மீனோட்டம் பாட்டி நாடியைப் பிடித்தாள். நாடியில் நிபுணியாம்! வைத்தி யர் விசுவநாதன் செட்டியார் சொல்லுவார்; நாங்கள் பரம் பரை வைத்யம்தான், நாடி பார்ப்பதில் எச்சுமி அம்மாவுக் கெதிர் நாங்கள் நிக்க முடியுமா? இத்தனைக்கும் என் அப்பா இட்டே விளையாட்டா கத்துண்டதுதான். குருவை மிஞ்சின இஷ்யை ஆயிட்டாங்க! அதெல்லாம் பிறவிக் கொடுப்பணை' அத்தை முகம் மாறிற்று 'ராமா!” அத்தை குரல் கணிர். விலங்குக்கு விலங்கு கூவல். தாத்தா ஓடி வந்தார். 'ஐயா கையில் தேவதாது பேசறதுடா அப்படியென்றால் என்ன? எங்களுக்குத் தெரியாது. ஆனால் அடிவயிற்றில் ஏதோ ஒரு சில்-இது ஏதோ விலங்கு பாஷை எல்லாம் தெரியறது. ஆனால் ஒண்ணும் புரியல்லே. ஐயாவின் தலையைத் தாத்தா தோளில் தாங்கிக் கொண் டார். அத்தை பக்கத்தில் மொய்த்தாள். இப்பொக்கூட அந்தக் காட்சி கண் முன் தொண்டை யில்தான் எழுகிறது. மூணும் ஒரே தொப்புள் கொடி மூவரும் ஒரு கொத்து. நாங்கள் கூட பிறகு தான். அந்த மட்டுக்கும் வேறுதான். - வெறி பிடித்த கூட்டம். என்ன வெறி? 'ஐயா, என்ன நடந்தது,’ ஐயா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாரேயன்றி பார்வை எங்கள் மேல் இல்லை. பன்னிரண்டாயிரம் மைல் களுக்கு அப்பால். பதினெட்டாயிரம் வருடங்களுக்கு முன் எதன்மேலோ பதிந்திருந்தது. வார்த்தைகள் அங்கிருந்து வந்தன. '-அசந்து துரங்கிப் போயிட்டேன். ‘வெடுக் குனு உதறிண்டு முழிப்பு வந்தது. ஒரேயிருட்டு. ஒர் அகலில் மட்டும் முத்துப் பொறி, எதிரே, யாரோ நிக்கறா, அலறிப் புடைச்சுண்டு எழுந்திருந்தேன், இல்லை வாயடைச்சுப் போச்சு.(கைகால் விழுந்து போச்சு. 'முகம் மூஞ்சினு உருப்படியா தெரியவில்லை. தெரி யாமலுமில்லே. ஏதோ கோட்டுக்குள் அடைச்ச இருட்டில் 3 * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/145&oldid=870269" இலிருந்து மீள்விக்கப்பட்டது