பக்கம்:மீனோட்டம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி அவனை எழுப்பவில்லை. அவன் தூங்கும் அலங்கோல கவர்ச்சியைக் கவனித்து நின்றாள். இப்போது அவன் கணவனாய்த் தோன்றவில்லை. ஏதோ விலங்கு, வழி தவறிப் போய், உள்ளே வந்து பாயில், அவள் பக்கத்தில் படுத்து விட்டது. எம்மா உண்டாலும் ஒட்டிய அந்த ஓநாய் வயிறும், மேல் தூக்கிய கைகளடியில் அக்குள் மயிர்ச் சுருளும், தலையணை மீது அவிழ்ந்த கட்டுக் குடுமியும் அந்த பாவனைக்கு உரமேற்றின. இத்தனை வருடங்களில் ஒரு தரமேனும் அவன் குறட்டை கேட்ட நினைவு அவளுக் கில்லை. மாலைக் காற்றில் ஜலத்தின் நலுங்கல் போல, அந்த மார்க் குழியில் அந்த மிதப்புத்தான் அவள் தைரியம். சுபாவத்திலேயே அவனுக்குத் தூக்கத்தில் அரைக் கண். அதனால், சமயத்தில் அவனுக்குத் துரக்கமா. விழிப்பா எனச் சட்டெனப் புரிவதில்லை. அவள் பயத்திற்கேற்ப அவனுக்கு விழிப்பும் சட்டென வராது. அவன் தூக்கத்தைக் கண்டு அசூயை கொள்வாள். ஏனெனில் அத்தனைக்கத்தனை அவளுக்குக் கோழித் துரக்கம், கூரையிலிருந்து காரை யுதிர்ந்தாலே போதும், கண் கலைந்து போம். அப்புறம் விடியும் வரை இருட்டில் விட்டத்தை அண்ணாந்த வண்ணம் விடியக் காத்திருக்க வேண்டியதுதான், அதோ, கூடத்தில் வெளவாலின் இறக்கை வீச்சு, சமயலறை ஜல தாரையுள் புஸ்-ஸ்-ஸ்” (அது உன்னை என்ன பண்றது? இன்னிக்கா, நேத்தா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/148&oldid=870275" இலிருந்து மீள்விக்கப்பட்டது