பக்கம்:மீனோட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனோட்டம் 14 ருந்தாலும், ஒன்னாயிருந்தேனும் வளைய வருவோமே! சண்டை பேர்ட்க்கூட ஆளில்லையேன்னு ஏங்கறப் போன்னா அருமை தெரியப் போறது? காதண்டை ஆள் தெரியாமல் யார் குரல்? நடக்கிறேன். குற்றாலம் போகும் வழியில் யானைப்பாலம் தாண்டிய தும், மேலகரம் வரை இடது பக்கம் வீடுகள். இடையிடையே கொத்துக் கொத்தாய் வீடுகளின் முகப்பு, வலதுபுறம் வயல், கள், அவை நடுவே, ஆங்காங்கே தென்னஞ்சோலைகளும் பதுங்கிய வயற்கிணறுகள், சுமலையேற்றங்கள், பம்ப் செட்டுக்குக் கட்டிடங்கள், நெற்கதிர்களின் சலசலப்பு, தென்னை மரங்களே பந்தல்கால்களாய் அவைமேல் அஸ்மான கிசி கட்டிய மேகக்கூட்டங்கள். இதைக் காட்டிலும் செழுமையான குக்கிராமங்கள், குற்றாலத்தைச் சூழ, வயல்களிடையே ஒளிந்து கொண்டிருக் கின்றன. "ஆண்டவன் புண்யத்தில் அது குற்றாலநாதரோ, தென்காசி விஸ்வனாதரோ இல்லை. இரண்டு பேரும்தான் புண்ணியத்தை பங்கிட்டுக் கொள்ளட்டுமே - இதுவரை எங்களுக்கு மழை சுழிச்சது கிடையாது, இனி எப்படியோ கலி முத்தறது. நெல் காட்டிக் கொடுத்தாலும், தென்னையும் மிளகாயும் கைகொடுக்கும் வரை எங்களுக்குக் கவலையில்லை. வருஷத்தில் ஆறுபறி. காவல்காரன் எங்களுக்குத் தெரிஞ்சு எடுத்தது காவலுக்கு எடுத்தது, திருடிக் கொண்டது போக மிச்சமே மடி நிறைய காஷ்-சரி சரி நீங்கள் படிச்சவாள், உங்களிடம் எல்லாத்தையும் கக்கிடப்படாது. இதுவே ஏதோ உளறிட்டேன் மறந்துட்டு-வாங்கோ ஒரு ஆட்டம் போடு வோம்-தெரியாதா ஸார் என்ன ஜோக்கர் ஸ்வாமி போலி ருக்கு இல்லையா, நிஜந்தானா? அடாடா எங்களுக்கு அதைத் தவிர வேறு தெரியாதே அதுவும் பரம்பரை பரம்பரையா ஊறிப்போனது ஸ்வாமி!” இடது கைப்புறத்தில் ஒரு பெரிய வயல் பரப்பு தாண்டி பிரம்மாண்டமான கிாைச்சீலையில் எழுதித் தொங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/15&oldid=870279" இலிருந்து மீள்விக்கப்பட்டது