பக்கம்:மீனோட்டம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கrசி #49 வாங்கிக்கோ ஐயரே இன்னொரு வடையை) மூணு மாதத்தில் கடைபோண்டி, அடுத்தாற் போல் எண்ணெய்ப் பிண்ணாக்கு கிடங்கு. அப்புறம் இரண்டு மாதம் காலி, பிறகு 'லொட்டு லொட்டு ஒரு தட்டான் பட்டறை, அப்புறம் திண்ணையில் ஒரு சோடாக் கடை, மறுபடியும் காலி-இதுமாதிரி ஏதோ ஒண்ணு, ஆனால் எதுவுமே உருப்பட்டதில்லை. ஆனால் அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். கொடுத்து வெச்ச ஆசாமி. 笼 X X X ஆனால் வேறு என்னதான் வேலை? இருப்பது பரம்பரையாய் ஒரு கோவில் பூஜை. இரண்டு காலம்தான், அதற்கே ஒழுங்காய் நெல் அளக்க ஊருக்கு வக்கில்லை. அதற்கு கொசிர் முலைப் பிள்ளையார் பூஜை, பாவ தோஷத்திற்கு அஞ்சி,இரக்கப்பட்டு வாரத்துக்கு ஒரு முறை இருமுறை பண்ணினால் உண்டு; இல்லையெனில் கேட்க வாயில்லை, எத்தனைசாமியானாலும் என்னா பொங்கினது ஒரு நைவேத்யம் தானே! சோற்றை மூடிய சிக்குத் துண்டை கொஞ்சம் தூக்கி மணியை இரண்டு ஆட்டு ஆட்டி உடனே மூடு! எல்லாம் அப்பப்போ உடல் அசதிக்கும் மனத்தென்புக்கும் தக்கபடி.. சுவாமி சன்னதியில் தோளுயரம் கங்காளம். அம்மன் சன்னதி அண்டா மாருயரம். மனமிருந்தால் கிணற்று ஜலத்தை மொண்டு இரண்டு ஏனங்களையும் விளிம்புகட்டி அபிஷேகம் பண்றதுதான். இல்லையோசொம்பு ஜலத்திலேயே இரண்டையுமே நடத்தறதுதான். சுவாமி கன்னத்தில் அறை வதற்குப் பதிலாக, லிங்கத்தின் முகத்திலே வீசிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு வெளியேறுவதும் உண்டுதான். இஷ்டப்பட்டால் நாள், கிழமையில் தனக்குத் தெரிந்த அலங்காரத்தில் உத்ஸவரை முறுக்கிக் கட்டி தாத்தா காலத்துக் கிழிசல் பட்டைத்தான் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டு, வருவோருக்கு விபூதி பிரசாதம் சிம்ட்டா பிடித்து வழங்கலாம். இல்லையோ, அது கெட்டதுபோ! கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/150&oldid=870282" இலிருந்து மீள்விக்கப்பட்டது