பக்கம்:மீனோட்டம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி 153 இறங்கி வரும் தலைமுறையில், எந்தக் கிளை, இலையிலேனும் தாய்க்கு மகன் தாலி கட்டி இருந்தாலும் அண்ணனுக்குத் தங்கை வாழ்க்கைப் பட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. - இப்படி வழி வழியாய்ச் செத்து வரும் ரத்தத்தில், மல. டுக்குப் பொறுப்பு யார் மேல் தனியாய்க் கட்டுவது? ஆண் மேலா பெண் மேலா? அட, அப்படித்தான் விருத்தியாகாமல் என்னோடு அற்றுப் போனால் தான் என்ன? வாரிசு இல்லாமல் என்ன சொத்து பாழாப் போறது? பொருளே முன்னால் எங்கிருந்து சேரும்? இந்த ஜாதிக்கே ஜாதகம் எங்கே சரி? சிவ சொத்தில் புழங்கி உருப் படுவது எது? தெரிந்து எடுத்தால் திருட்டு, தெரியாமல் நேர்ந்தால் பிழை என்று விளக்கம் தந்து விடலாம். ஆனால் வினை ஒன்றுதானே? - - - அறியாமல் செய்தேன் என்பதே ஒரு புளுகு தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? இருந்தால் அவன்தான் முதல் மோசடி...அவன் மேல் தான் முதலில் கல்லை எறிய வேண்டும்-என்னையேதான் சொல்லிக்கறேன். அந்த நாளில், எப்போதேனும் பக்கத்துரில் உற்றார் உற வினர் வீட்டில் நேரும் ஒரு கல்யாணம் கார்த்திக்கு, இவள் போட்டுக் கொள்ள, அம்பாள் கழுத்திலிருந்து அட்டிகையோ காசுமாலையோ கடன் வாங்கியிருக்க மாட்டேனா-தர்மகர்த் தாவை கைக்குள் போட்டுக் கொண்டோ அவன் கண்ணில் மண்ணைத் தூவி விட்டோ? அட்டிகையென்ன, ஒட்டி யாணமேகூட. எடுத்ததற்குப் பிராயச்சித்தம் வெள்ளிக்கிழமை ஸ்கஸ்ர நாமத்தைக் கொஞ்சம்கூட நிறுத்தி இன்னும் ராகமாய்ப் பாடி அர்ச்சனை, அவ்வளவு தானே! ஆச்சு, என் அர்ச்சனைகளும் ஒஞ்சு போச்சு. எனக்கு ஐம்பதை எட்டிப் பிடிக்கிறது. இவனுக்கு மாத்திரம் வயசு நின்னுட்டுதா. வலது நெற்றிப் பொட்டில் நுரை அடையாய் ஒடறது. உடம்பில் கூட பழைய நிறம் உதிர்ந்து போச்சு. ஆனால் அவள்...எனக்குத் தெரிந்து என் முப்பாட்ட மீ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/154&oldid=870287" இலிருந்து மீள்விக்கப்பட்டது