பக்கம்:மீனோட்டம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

舞54 மீனோட்டம் னுக்கும் மூணு தலைமுறைக்கு முன்னாலிருந்து நின்ற விடத் தில் அசையாமல் நின்று காத்திருக்காளே ஒருத்தி-அவள் தான்-அன்றுகண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருக்கிறாள். தினம் இரண்டு வேளையும் எண்ணெய்க் காப்பு மொழு மொழுப்புக்கு என்ன குறைச்சல் முகம்தான்.லேசாய்... ஆனால் தேயத் தேய அவளுக்கு மவுஸ் ஜாஸ்தி. நமக்குத் தேய்ந்தால் நாம் கிழம், அப்புறம் நாமே குளோஸ். X X X சுபாவமே பேச்சுக் குறைவு. காது மந்தம். வயதாக ஆக டமார செவிடு ஆனபின் எதற்கும் காதண்டை வந்து கத்திக் கத்தி அலுத்து அவளுக்கும் இப்போது வாய் ஒய்ஞ்சு போச்சு. இப்பவோ அவனிடம் அவள் கை அபினயம்தான். மற்றும் உதட்டசைவிலிருந்து அவன் யூகமாய்க் கண்டு கொள்வதும் அவன் சொல்வி அவள் செய்ய நேராமல் போவதுமாவே, தினப்படி அலுவல்கள் ஒரு ஒழுங்கில் விழுந்தாயிற்று. பேசவே என்ன இருக்கிறது? பேசின பேச்சையே திரும்பத் திரும்பப் பேசி, போட்ட சண்டையே திரும்பத் திரும்பப் போட்டு, துப்பிய எச்சிலைத் திரும்ப உட்கொள்வது போல், சமரசமே அதே முறையில் திரும்பத்திரும்ப ஆகி, இருவர் உறவிலும்-அது உடலோ, சொல்லோ, செயலோஇதுவரை சொல்லாதது, செய்யாதது, இல்லாதது இனிமேல் வரப்போவது, எதிர்பாராதது எனும் செயலூக்கியே இற்றுப் போயிற்று. ஒன்றுடன் ஒன்றுமோதி சமபலத்தில் சமகாயம் கண்டு பிரிந்த இரு விலங்குகள் அதனதன் காயங்களை அது அது நக்கிக் கொண்டு, ஒரே நீரோட்டத்தில் அதனதன் தண் னிரைக் குடிப்பது போல், இப்போது இருவரும் முகர்வது மின்றி மோதுவதுமின்றி, அவரவர் எண்ணத்தில் அவரவர் ஒருவரைப் பற்றி ஒருவர் எண்ணிக் கொண்டிருக்கும் எண் ணங்களே சரியா என்று எண்ணக்கூட அலுப்பு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/155&oldid=870289" இலிருந்து மீள்விக்கப்பட்டது