பக்கம்:மீனோட்டம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி. #55 அலுப்பையும் மீறிய நிலை-அலுப்பு என்று ஒன்று படக்கூட வலுவும் சுரணையும் செத்துப் போய் நெஞ்சில் பூஞ்சைக் காளானின் பூப்பு யந்திர வாழ்க்கையின் யந்திரத்தின் தேய்வு. . X X 关 அரைத் தூக்கத்தின் மனசில் கொலுசில் மாட்டிக் கொண்டு நினைவின் அடிவாரத்திலிருந்து கொத்தும் குடலு மாய்க் கிளம்பும் இனம் தெரியா கொதிப்புகள், உருவக விகாரங்கள்... . லிங்கத்தின் நெற்றியில் காய்ந்த சந்தனத்தைக் கிள்ளிய இடத்தில் திடீரென முண்டிக் கொண்டு அசிங்கமாய் ஒரு ரத்தக் கட்டி. கங்காளத்திலிருந்து மொண்டு லிங்கத்தின் மண்டைமீது ஊற்றியதும் குடத்திலிருந்து ஜலத்துக்குப் பதிலாக கொட கொடவென்று நுரை கக்கிக் கொண்டு இரத்தம். அம்பாள் சன்னதியில் விளக்குத் திரியை துண்டப்போய் தீ விரலைச் சுட்டதும், அவன் உடலை சிவப்பு, நீலம், ஊதா, பச்சை, மஞ்சள் வர்ணங்கள் வெகு வேகமாய் அடுத்தடுத்து ஊடுருவி அந்தந்த நிறம், அவன் மாறி எரிந்து பஸ்பமாய்க் குமுங்கிக் குன்றி, பிசுபிசுவென்று உதிர்ந்து போவதாய் அம்மன் பின்னால் மாட்டி இருக்கும் நிலைக்கண்ணாடியில் பிம்பம். அம்மனுக்கு இப்போ புல்லாக்குன்னா மாட்டினேன். மூக்கில் ஏன் சளி தொங்கறது? அண்டா ஜல்த்தில் கைக்கு ஏதோ வழவழவென தட்டுப் பட்டதும், நூலிழை தடுமனாய் உணர்ந்து, கைக்கடியிலேயே உடனே வளர்ந்து, கனவேகத்தில் மழமழவென ஆலமரத் தின் அடி மரப் பருமனுக்கு விங்கி, இன்னும் வீங்கிக் கொண்டே, அதன் பிளந்த வாயுள் ஸ்வாமி, அம்மன், கர்ப்பக் கிருஹம், கோபுரம் உள்பட, தான் உள்பட, விழுகையில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டதும் அந்த ராக்ஷஸ் பாம்பு அவன் காலை உதைத்துக் கொண்டிருக்கும் தூணாய்ச் சமைந்தது. திருட்டுத்தனமாய் வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/156&oldid=870291" இலிருந்து மீள்விக்கப்பட்டது