பக்கம்:மீனோட்டம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.56 மீனோட்டம் ஆள் வருமுன் தின்கவுமுடியாமல் விழுங்கவுமுடியாமல் தவிக்கும் முறுக்கு சீடை போல் பரம்பரைப் பழக்க வாசனை யில் அவனையுமறியாமல் வாயில் அவனறிந்த ரrாமந்திரங் களின் அசுரங்கள் திடீரென நிறைகின்றன. 'அம்பா தையநாயகி வைதீஸ்வரா!!” அம்மையும் அப்பனும், மெளன. சாகதியாய், சுட்டகல் லாய் அவரவர் இடத்தில் காலமாய் நிற்கிறார்கள். . X 烹 X மற்றவர்க்கு அவரவர் இஷ்ட வரமருள் தெய்வம்; எனக்குக்கல். நட்ட பீஜத்தை குளிப்பாட்டி, அதன் தலையில் பூச் சுற்றி, தூபதீபம் காட்டுவதில் என் வயிற்றுப் பிழைப்பைப் போட்டிருக்கிஇது. இந்தத் தெய்வங்களின் 2. டுவையை நாளுக்கிருமுறை களைந்து, உடுத்திப் பார்த்துப் பார்த்து என் ஆண்மையே அவிஞ்சு போச்சேர்? கல்லைப் பூஜித்து பூஜித்து நானே கல்லாய் மாறிக் கொண்டிருக்கிறேன். வரவர மாரில் ஏதோ கனம் அழுத் தறாப் போலிருக்கு. தேடினால், மார்புத்துடிப்பு சட்டென்று கைக்கடியில் கிடைக்கவில்லை போலக்கூட சில சமயங்கள் தோணறது. எனக்கே வேலை வந்து விட்டதா? அப்படியானால் அம்மாவுக்குக் கொடுத்த வாக்கை நிறை வேற்றியாக வேணுமே! ஏற்கனவே அம்மா என்னைத் தலை யாட்டின்னு சொல்லிவிட்டாள். அப்படி இல்லை என்று நான் ஒரு தரமேனும் சொன்னதைச் செய்ய வேண்டாமா? என்னையே எனக்கு நிரூபித்துக் கொள்வது எப்படி? X、 X X நாளைக்கு காசிநாளை போய் இன்று வருகிறது. நேற்று போன நாளையை ஏமாற்றிய இன்று. இன்று போய் மறுபடி நாளை. இன்று வந்த இன்றை மன்னித்துவிட்ட நாளை. நேற்று, இன்று, நாளையாகத் தன் வாலைத்தான் தேடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/157&oldid=870293" இலிருந்து மீள்விக்கப்பட்டது