பக்கம்:மீனோட்டம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி i57 பிடிக்கும். பூனைக்குட்டிபோல் அன்றன்றாய், நாள் ஒவ் வொன்று. நாளைக்கு காசி. அன்றொருத்தன் அப்படித்தான் நாளையைத் தேடி GHTfTSðf. ஒவ்வொரு நாளும் நாளையாக மாறி, நெஞ்சில் நாளை யின் கேலிக் கூத்து. அவன் கனவுகளில் அம்மாவின் அஸ்திப் பானையில் இருந்து நடராஜன் தோன்றினான். ஊன்றிய பாதத்தினடியில் முயலகனுக்குப் பதில் அவன். விழிப்பு வந்ததும் வெகு நேரம் வரை ரண வலி போக வில்லை. பின்னே என்ன, ஆண்டவன் மிதித்தால் லேசா? கனவுப் பலன்படி கனவில் தாண்டவம் கண்டால் யமன். காஞ்சியில் பிற, காசியில் இற. காசிக்குப் போவோரில் சிலர், அதற்காகத் தானே அங்கு சாகப் போது தேடி காத்துக் கிடக்கிறார்! பிறக்கப் பத்து மாதம். சாகப் பத்து மாதம் அதென்ன சாஸ்திரமோ? - காரணமில்லாமல் சாஸ்திரமில்லை. போனால் திரும்பக் கூடாது. மானத்தின் லட்சியம் அது தான். ஆனால் போனால் தானே சாகலாம்? எப்படியும் போகப் போற உசிரை அம்மா சுலபமா பணயம் வெச்சு வாக்கை வாங்கிண்டுட்டாள். ஆனால் காசி என்ன லேசா? கொல்லைப்புறமா? காசு? வெச்சு வாங்க இங்கே என்ன இருக்கு? என் மாரில் சிக்குப் பூணுால், அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு. இருப்பு, செலவு, பாக்கி எல்லாமே இவ்வளவுதான். -- வீட்டை அடைமானம் வைக்கலாம்னா அதுவும் சொந்தம்னு நிச்சயமில்லை. பழைய ஏடு எதையாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/158&oldid=870295" இலிருந்து மீள்விக்கப்பட்டது