பக்கம்:மீனோட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி 15 விட்டாற் போல் ஒரு பெரிய மலைக்குன்று கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது. அதன் அடிவாரத்தில் தாய்க்கோழியின் சிறகடியில் போல் வீடுகள், மொட்டை மாடிகள், சிவப்பு ஒடுக் கூரைகள், ஒலைக்கிற்றுக் கூரைகள் எல்லாம் ஒருங்கே செல்ல மாய் ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன. குன்றின் மேல் லேசாய்க் குமுறுகிறது. என்னையறியாமலே நின்று நோக்குகிறேன். இந்த அந்தி வேளையில் இருளும் பகலும் ஒன்று கலக்கும் ஜாலக்கில் கோழிக்குன்று மூச்சு விடுகிறதோ? பின்னால் ஆவரவம் கேட்டுத் திரும்புகிறேன். "ஓ நீங்களா?” 'வாங்கோ இருவரும் கைகூப்பிக் கொள்கிறோம். இந்த ஊர் பழக்கம் வழியில் கண்டாலும் சரி, அங்கேயே பேசிவிட்டு அப்படியே தாண்டிப் போனாலும் சரி, ஒருவருக் கொருவர் வாங்கோ' அருவிக்கு போறேளா?” ஏதோ அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறேன் ஆமாம். ஆனால் ஸ்னானம் பண்ணறேனோ இல்லையோ? நீங்களும் அங்கே தான் வரேளா? 'இல்லை சார் அவர் பின்னடைந்தார், நீங்கள் போயிட்டு வாங்கோ. அவர் என்னோடு வர விரும்பவில்லை எனத் தெரிந்தது: அவசரமாய் அங்கு ஏதோ ஒற்றையடிப் பாதையுள் நுழைந்து விட்டார். --> தயிராடை போல் எப்பவும் விசனம் கனத்துத் தோய்ந்த முகம். குறுகுறுப்பான மூக்குமுழி கூட, ஆனால் அந்தப் புழுக்கம் முகத்தைக் கெடுத்தது, எனக்காக ஒரு நொடி தோன்றிய புன்னகைகூட உடனே மிரண்டு நொடித்து மறைந்தது. ஆபீசிலும் அப்படித்தான் அவசியமில்லாமல் பேச மாட்டார். திடீரெனக் காரணமேயில்லாமல் கோபத்தில் 'ஓ'வென்று கத்துவார், அடிபட்ட விலங்குபோல் உடனே பொட்டென அடங்கி விடுவார், அவர் கோபத்தை யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/16&oldid=870299" இலிருந்து மீள்விக்கப்பட்டது