பக்கம்:மீனோட்டம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி #61 தாக்குவரட்சி, உலையில் இன்னும் அரிசி கொட்டவில்லை. வெந்நீரைப் பரக்கப் பரக்க கொட்டி யாற்றி தம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து உதட்டில் வைத்தாள். ஒரு முழுங்குதான்-அது கூடஇல்லை. இருமல் வந்து புரைக்கேறி விட்டது. இமை நேரத்தில் கருப்பு விழி இமைக் கூரைக்கு ஏறி விழி வெள்ளைக்குப்பின் மறைந்தது; மூச்சு நெஞ்சில் கடைய ஆரம்பித்து விட்டது. "ஐயோ ஐயோ!! ஐயோ!!!! தான் அலறினது-தெரியவில்லை. என்ன செய்தாள் என்றோ தெரியாது. தலைக்கடியில் கையைக் கொடுத்துத் துரக்கி அவனைத் தன் மேல் சாற்றிக் கொண்டாள். மார்பைத் தடவிக் கொடுத்தாள். வரலாமா, வேண்டாமா என்று பார்த்துக் கொண்டு மெதுவாய்க் கருப்பு விழி கீழே இறங்கிற்று. மூக்சு மறுபடியும் முறையாகக் கோர்த்து வாங்கி நிலைப்படத் தலைப்பட்டது. விழிக்குஹைகளிலிருந்து தணற் பிழம்புகள் அவள் மேல் ஊன்றுகையில் அவளுக்கு அடிவயிற்றில் சுறீல்” வாசற்படியில் நிழல் தட்டி நிமிர்ந்தால், அவள் கணவன் முழங்கையில் நைவேத்ய மூட்டையை மாற்றிக் கொண்டு நின்றான். அப்போதுதான் அவளுக்கே அவள் நிலை தெரிந்தது. தன் முழங்கை வளைவில் நோயாளியின் தலைதாங்கியிருப்பது உடல் வெலவெலத்து விட்டது. அவனைக் கீழே இறக்கி விட்டு எழுந்து அவ்விடம் விட்டு விடுவிடு வென்று போய் விட்டாள். X X X அவளைத் தேடிச் சென்ற போது கொல்லைப்புறத்தில் புன்னை மரத்தடியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட் கார்ந்திருக்கக் கண்டான்; "இங்கே வந்து குந்தியிருந்தால் என்ன அர்த்தம்?” ஊம்-ஊம் எழுந்திரு. கஞ்சியைப் போடு, கஷாயச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/162&oldid=870304" இலிருந்து மீள்விக்கப்பட்டது