பக்கம்:மீனோட்டம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l62 மீனோட்டம் சட்டியை அடுப்பில் காய வை. இன்னிக்கு கஷாயத்தை மாத்தியாகணும். அந்தமட்டுக்கும் பரவாயில்லை. தப்பிச்சுட் டான்'. அவள் எழவில்லை. முகம் குங்குமமாய்க்கொதித்தது; விழிகள் தளும்பின.

இப்போ என்ன ஆயிடுத்து? உனக்கு ஒரு தம்பியிருந் தால் செய்யமாட்டையா? ஆபத்துக்குத் தோஷமில்லை. முதலில் நான் சொன்னதைக் கவனி’.

அவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான். அவன் அப்படிச் சொன்னதும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. விக்கி விக்கி அழுகை. அழ அழ இன்னும் அழுகை. . - அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இதுமாதிரி அவள் அழுததேயில்லை. அழுகையே மறந்து போன பின் இது ஒரு புது அனுபவமாய் இருந்தது. அழுதால் இன்பமாய்க்கூட இருக்குமா என்ன? இது அழுகையில்லை. கண்ணிரில் குளிப்பு. எங்கெங்கோ ஏதேதோ அழுக்குகள், கறைகள், கனங்கள் கரைந்தோடி, உடலே லேசுபட்டு, குளிர்ந்து... 影 袭 家

உன் பேர் என்ன?”

நோயாளிக்குப் பேசச் சக்தியில்லை. தரையில் எழுதிக் காண்பித்தான். ·5厅剑” 苓 $F 率 சருகு துளிர்ப்பது போல், நாள் ஆக ஆக, விலாச்சதை பிய்ந்து விடும் போல் பிதுங்கிய எலும்புகள் மூடி, கன்னத்துக் குழிகள் மூடி ஒரு நாள் வெந்நீரின் பதச் சூட்டில் குளிப்பாட்டி, அவள் கணவனே அவனுக்கு உடம்பு தேய்த்து விட்டான். சுட்ட அரிசி அப்பளாமும் ஆவி பறக்க மிளகு ரஸ்மும் ஒரு நாள் காலை சொல்லிக் கொள்ளாமலேயே வெளியே போய் மயிர் வெட்டிக் கொண்டு, கூடிவரம் பண்ணிக் கொண்டு வந்து விட்டான். சட்டென முகம் அடையாளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/163&oldid=870306" இலிருந்து மீள்விக்கப்பட்டது