பக்கம்:மீனோட்டம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மீனோட்டம் பிறந்த சுருக்கில் பிணமாய்க் கிடந்திருப்பேனோ, யார் கண்டது? எனக்கு என்னவோ மாதிரி சங்கடமாயிருந்தது. அவன் தோள் மேல் கைவைத்தேன். "காசி உனக்குச் சாவே கிடையாது’ என்றேன். "அது எனக்கு நன்றாய்த் தெரிகிறது.” அப்படி அவன் சொன்னபோது அவனை நான் தொட்டுக் கொண்டிருப்பதாகவே எனக்கு இல்லை. என் தொடலுக்கு அவன் அகப்படவில்லையென்றே பட்டது. ஒவ்வொருவராய் இப்படி ஆசி கூறிக் கூறி அழிவேயில்லாமல் அடித்துவிடும் ஆசி உண்மையில் சாபம் தானோ? X X X எனக்குத் திடீரென வியப்பு உண்டாயிற்று. காசி பேசினது எனக்கு எப்படிக் காது கேட்டது? நானோ செவிடு. நான் அவனைத் தனியாய்க் கேட்கவில்லை. என் ஆச்சரியம் என் வாய்விட்டுத் தானே வந்து விட்டது. காசியின் புன்னகையில் ஏதோ புதிர் என் நெஞ்சுக்கு மட்டும் தட்டுகிறது. நானே இதைக் கவனித்தேன். பல கேள்விகளுக்குப் பதிலாய் அந்தப் புன்னகை வைத்திருக் கிறான். அது புன்னகையுமில்லை. நாக்கு நுனிவரை வந்து விட்ட பேச்சை அங்கேயே தடுத்து விட்டாற்போல் உதட்டின் உறைவு. 'குருக்களே, இரைச்சலைக் கேட்டு கேட்டு உங்களுக்குச் செவியடைச்சுப் போச்சு. ஆனால் நாம் எல்லோருமே ஒசைகள், ஓசைகளின் உருவங்களாகத்தான் மூக்சும் சதையு மாய் இயங்குகிறோம். இதை உயிர் உணர ஆரம்பித்ததும்ே வாசல்கள் திறந்து கொள்கின்றன. அவ்வளவுதான்?” ‘'நீ என்ன சொல்கிறாம்? புரியல்லையே!” "குருக்களே, நான் இல்லாததை உண்டாக்க முடியாது. என்னால் முடிந்தவரை ஏற்கனவே இருப்பதை உங்களை உங்களுக்கு நினைப்பு மூட்டுகிறேன். அவ்வளவுதான்.” காசி சொல்வது சுவையாய் இருக்கிறது. புரியவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/165&oldid=870309" இலிருந்து மீள்விக்கப்பட்டது