பக்கம்:மீனோட்டம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி. j65 புரியாமலும் இல்லை. தலை கிர்ர்...... இவனை எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. இவன் வந்த பிறகே வீட்டுக்கு கலர் மாறி விட்டது. இது திடீர்னு நேர்ந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் திடீர்னு பார்த்தேனோ என்னவோ? இந்த மாறுதலைக் கலராய்ப் பார்க்கறப்போ தான் அதுவே புரியறாப் போலத் தோணறது. பார்க்கவும் அப்படித். தான் பிடிக்கிறது. ஐப்பசி மாதம் எட்டு நாள் விடாமழைக்குப் பின், வக்களிப்பு போல், அங்கங்கே - எங்கெங்கோ - ஏதேதோ மப்புகள் கலையறாப்போல் என்னென்னவோ புதிசு புதிசா அசைவு கொடுக்கிறது. X X X காசி பசுமாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறான். இதன் தாய் வயிற்றில் இது பிறந்து, கன்றாகி, பசுவாகி இது. வும் தாயான நாள் முதல் இதுவும் நாங்களும் ஒருவரை ஒருவர் அறிவோம். ஆனால் அவன் பக்கத்தில் வந்தாலே அதற்கு ரோமாஞ்சலி ஏற்படுகிறது. அவன் அந்த உடம்பைத் தேய்த்துக் கொண்டிருக்கையிலேயே அவன் முகத்தை நக்கிக் கொடுக்க தலையைத் திருப்பித் திருப்பித் தவிக்கிறது. அட, காசிக்கு மாடு கறக்கவும் தெரியுமா? நிமிஷமாய்க் குவளையில் நுரை பொங்கி வழிகிறது. "என்ன காசி, உன் கைபட்டதுமே பசுவுக்கு உடம் பெல்லாம் பாலாய் மாறிப் போச்சு? என்ன சொக்குப் பொடி வெச்சிருக்கே.” எல்லாம் குருக்கள் ஆசீர்வாதம் தான்!” வந்தனம் தெரிவிக்கிறானா? ஏளனம் பண்ணுகிறானா? இன்று காலை மடி ஜூலம் "கிளுக், கிளுக்” என்று தளும்ப குடத்தை இடுப்பில் ஏந்தி ஈரப் புடவையை உடம்பில் சுற்றியபடி, கிணற்றடியிலிருந்து இவள் வருகையில்'இது இவள்தானா?” நிஜமாவே கண்ணைக் கசக்கிக் கொண்டேன். ஏதோ நினைப்பில் மோவாய்க் குழியில் புன்னகை உதயத்தில் முகத்தில் ஒரு தனி வெளிச்சம் உள்ளிருந்து பரவும் அவ்வொளியில் புருவத்தின் கவானும் மேல் உதட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/166&oldid=870312" இலிருந்து மீள்விக்கப்பட்டது