பக்கம்:மீனோட்டம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் 167 கொடுங்கோலாட்சிக்குள் மாட்டிக் கொண்டதாய் நாம் அதைரியப்பட வேண்டியதில்லை. நம்மை இவை ஆள் வதற்குப் பதில், நாம் இவைகளை ஆளக் கூடாது என்று எழுதியிருக்கிறதா? எழுதியிருந்தால் தான் எள்ன? நம் விதியை மாற்றிக் கொள்ள நமக்குச் சக்தி உண்டு. என்ன முழிக்கறேள் ரெண்டு பேரும்?-இதோ பாருங்கள்! பூ! அவன் ஜலத்தின் மேல் ஊதினதும் அண்டாவுள் மாட்டிக் கொண்ட வான் மண்டலம் கவிழ்ந்தது. நrத் திரங்கள் நிலை குலைந்து ஒன்றன் மேல் ஒன்று கதி கலங்கிச் சரிந்தன. - “பார்த்தீர்கனா?-மனமுண்டாளால் இடமுண்டு-இன்று நிழல்ை ஆண்டால் நாளை நிஜத்தை ஆட்சி புரிவோம். நம் விதி நம் கையில் தான் இருக்கிறது. எண்ணத்தில் தீவிரம் இருந்தால், இந்த பூமியின் கோளத்தையே, விழுங்கப் போகும் லேகிய உருண்டையாய் ஒரு நாள் உள்ள்ங்கையில் ஏந்தி விடலாம். குருக்களே, என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல் கிறீர்கள்?-’’ - *. - பாம்பின் சீறல் போல் அவனின்று சிரிப்பு வெடித்தது. அவனின்று வெளிப்பட்ட விஷயத்தின் மஹத்தைக் காட்டிலும், குரலில் தொனித்த வெறி, பேச்சில் ஏறிவிட்ட அதட்டல், முகத்தில் குழம்பிய ருத்ரம்-அவனைப்ப்ார்க்கவே அச்சமாயிருந்தது. அவள் முகத்தைக் கைகளுள் புதைத்துக் கொண்டாள். அவன் தன் வசத்தில் இல்லை, மகுடி வசப்பட்ட பாம்பு போல, அவனை ஆட்கொண்டு விட்ட ஆவேசத்தில் அவன் உடல் லோாய் மிதப்பலாடிற்று, அவள் பின்னிடைந்தாள். அவள் அறியாமலே அவள் கை என் கையை நாடிற்று. - - அன்று முழுவதும் அவன் பிறகு பேசவில்லை. சாப்பிட்வு மில்லை. நாங்களும் அவன் வழிக்குப் போகவில்லை. நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டு நெடுநேரம் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். - - --- х X 溪 - இன்று காலை நாங்கள் கொல்லைப் புறத்தில் இருந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/168&oldid=870316" இலிருந்து மீள்விக்கப்பட்டது