பக்கம்:மீனோட்டம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மீனோட்டிம் அவள் கிணற்றடியில் குடந்தைத் தேய்த்துக் கொண்டிருந் தாள். நான் அந்தரத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒரு அவரைக் கொடியை மாட்டுக் கொட்டகையின் ஒலைக்கூரை மீது ஏற்றி விட வாக்ான இடம் தேடிக் கொண்டிருந்தேன். முதுகில் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு காசி தரை யில் என்னவோ தேடிக் கொண்டிருந்தான், மேலெழுந்த வாரியாய் மனம் இந்தக் காட்சியைத்தான் வாங்கிக் கொண்டிருந்தது. இதெல்லாமே பின்னால்தான் நினைவுக்கு வருகிறது. காசி எதையோ குனிந்தெடுத்து சட்டென்று அண்ணாந்து ஆகாயத்தில் வீசி யெறிந்தான். பிறகு அரைக்கணம் அல்ல. ஒருகணம் ஒடியிருக்குமோ என்னவோ தெரியாது. அடுத்து நேர்ந்த அதிர்ச்சிதான் எங்களுக்குத் தெரியும். பொத்தென்று மேலிருந்து ஏதோ பூமியில் விழுந்தது. வானுடன் ஒவ்விய நீல நிறத்தில், உரிக்காத மட்டை தேங் காயளவுக்கு ஒரு பr, அதன் உடலில் பொன்னும் வெள்ளி யுமாய் வைத்த புள்ளிகளும் சிரக்கொண்டைக் கதிர்களும் பொன் வெயிலில் மின்னின. கண்ணெதிரில் அதன் கண் கண்ணாடி ஆகிவிட்டது. அதைச் சுட்டிக் காட்டியபடி காசி நாணறுந்த வில்போல் குதித்தான். 'பார்த்தேளா, குருக்களே, பார்த்தேளா? உலகத் துக்கே பொதுவான உண்மை பொருளுக்கும் நிழலுக்கும் உள்ள தொடர்பை உலகத்தில் நிழலில்லாத பொருளே இல்லை. பொருளில்லாமல் நிழலும் இல்லை. எவ்வளவு உயரம் பறந்தாலும் அது அது அதனதன் நிழலுக்குள் விழுந் தாகணும்' எனக்கு உடம்பு வெலவெலத்து விட்டது. அவளைப் பார்க்க சஹிக்கவில்லை. இரத்தமும்,மஞ்சளும் கண்ணாம்பும் முகத்தில் மாறி மாறிப் பாய்ந்து வாங்கி மறு படியும் பாய்ந்தன, அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு, குப்பைகொட்டும் எருக்குழியண்டை ஓடினாள். குமட்டிக் குமட்டி:வாந்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/169&oldid=870318" இலிருந்து மீள்விக்கப்பட்டது