பக்கம்:மீனோட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி 17 ஆனால் எதுவாய் இருந்தால் என்ன? இவ்வருவியை உன் கூந்தலின் அவிழ்தலாய்க் காணும் கண் என்னுள் திறக்கையில் தேவி கண் திறப்பு என்னால் தாங்க முடியவில்லை. கண் இருட்டுகிறது. கண் இருட்டலில் மண்டை உச்சியுள் ஏதோ வானம் வெடித்துக் குடைவிரிப்பிலிருந்து இறங்கும் பலவர்ண நகத் திரங்கள் தம்மில் ஒன்றாகத் தம்முள் என்னை இழுக்கின்றன. எத்தனை எத்தனை உவமைகள் உற்பத்தி ஆயினும் உன்னை எட்ட எத்தனை எத்தனை உயரம் பறந்தாலும் அக்தனையும் உன் ஒருகால் சுவடு தீண்ட த்ராணியற்று நீர்த்து உதிர்கையில் புவனமெ ஜல்ஜல் உன் கால் சதங்கையினின்று கழன்ற கிண்கிணி மணி-வேண்டாம் வேண்டாம் தேவி அப்யம் அபயம் அபசாரம் ஆனால் என்னால் தாங்க முடியவில்லை. உன் செளந்தர்யத்தி னின்று என்னைக் காப்பாற்று காப்பாற்று. நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக் கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுகள், வ்ாக்கியங்கள், வார்த்தைகள். பதங்கள் பத-ஸ்ரி-க-ஸ்ா-ம-த ஸ்வரங்கள் ஒசைகள், ஒலிகள், மோனங்கள். திக்திக் திகில்கள். திமிதிமி எழுத்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நகடித்ர இருட்டில் கருங் குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளை சிலிர்த்துக் கொண்டு தங்கத்துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும்-குளம்போசை தாங்காமல் செவி களைப் பொத்திக் கொள்கிறேன். கண் கவிழ்கிறேன்: விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது. மூச்சு மெதுவாய் முனை திரும்புகிறது. உள் மூட்டம் படிப்படியாய்க் கலைந்து வக்களிப்பு தோன்றுகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/18&oldid=870329" இலிருந்து மீள்விக்கப்பட்டது