பக்கம்:மீனோட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி 19 ஜிவ்வில்.:படிவம் கண்டு அதன் மூலம் வாயடைப்பினின்று விமோசனத்துக்குத் தவிப்பதாகத் தோன்றிற்று. இல்லா விடில் என்னை ஒரு மஹாசோகம் என் மேல் இப்போது கவிவானேன். தொண்டையில் இனம் புரியாத் துக்கம். வீறி அழுதால் தேவலை. அழுது அழுது அப்படியே கரைந்து விட ஒரு அவா... நான்தான் ஏதேதோ கவலைகளில் உழன்று கொண்டி ருக்கிறேன். அருவியடியில் ஜனத்திரள் தெரிந்தது. கொக் கரிப்புக்கும் கும்மாளத்திற்குமிடையே ஸ்னானம் ஆனந்த மாய் நடக்கிறது, சீஸன் மும்முரம் இன்னும் கொஞ்ச நேர மானால் ஸ்டேஜ் லைட்டிங் போல் ராக்ஷஸ் வெளிச்சங்கள் போட்டாகி விடும் ராப்பூராக் களி... ஆ. அதென்ன? குழல் சரங்கள் போல் ஓயாது பொங்குமாங்கடலுள் பெய்து கொண்டிருக்கும் ஜலச்சரங்களைத் தள்ளிக் கொண்டு ஒரு தோற்றம் வெளிப்பட்டது. உடல்கட்டு அல்லது உடல் தளர்வுப்படி வயது முப்பது முப்பத்தைந்து இருக்கும். பசுப் போல் குழைந்த சரீரம். கொசுவக்கட்டு. வாடாமல்லிக் கலர்பட்டு. சர்வாபரண பூவிதை. அந்தக் கால சம்பிரதாயப் படி வலது தோளில் அணிந்திருந்த வங்கியிலிருந்து சதை மேலும் கீழும் பிதுங்கிற்று. ஒரு முறை பாறை விளிம்புக்கு வந்து நின்று சுற்றும் முற்றும் எதையோ தேடுவது போல் பார்த்தாள். அந்தி யிருளில் முகம் தெரியவில்லை. முழு இருளாலேயே ஆகிய முகம் அதில் மூக்கிலும் செவிகளிலும் வைரம் சுடர் விட்டது. கீழே குளிப்பவர் யாரும் அவளைக் கவனிக்கவில்லை, அவளே அவர்கள் கண்ணில் படவில்லையோ என்னவோ? நான் என்ன வாழ்ந்தேன்? எனக்குத்தான் வாயடைத்து விட்டதே? ஒரு முறை சுற்று முற்றும் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி, இரு கைகளையும் சிரம் மேல் கூப்பிக் கொண்டு பொங்குமாங்கடலுள் பாய்ந்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/20&oldid=870336" இலிருந்து மீள்விக்கப்பட்டது