பக்கம்:மீனோட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மீனோட்டம் కgGuir? நோனா? இல்லை. திடுக்கிட்டுத் திரும்பின்ேன். என் பின்னால் அவர் நின்று கொண்டிருந்தார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு. - இந்த ஸ்னான ஆரவாரங்களைத் தாண்டி ஏதேதோ கேட்ட குரல்கள், இது வரை. iர்த குரல்கள் பேச்சுக் குரல்கள் உட்செவியில் மோதுகின்றன. 'ஏண்டி என்ன துணிச்சல்டி, நடுரர்த்ரியிலே. அஞ்: அவ்வளவு தூரம் நடந்து மலை மேலே ஏறி, நடுவிலே பூ: பொட்டு பிடுங்கித்துன்னா, புலியே அறைஞ்சதுன்னா என்ன செய்திருப்பே? - ‘இதென்ன நீ சமத்தாப் பேசறதா எண்ணமா? சாகத் துணிஞ்சப்பறம் பூச்சிகடிச்சோ புவியறைஞ்சோ-அருவியில் விழுந்தோ எப்படிச் செத்தால் என்ன? அப்படிச் சொல்விவிட முடியுமா? அதிலேயும் இடது கண், வலது கண் இருக்கோன்னோ? ‘சாவுக்கா? நீ ஏதாவது பேத்திட்டேன்னா கடைசி வரைக்கும் சாதிச்சாகனுமாக்கும்? அவளுக்கு ஒருவேளை தன் உடலின் சுவடுகூட யாருக்கும் கிடைக்கக்கூடாதுங்கற எண்ணத்துலேதான பொங்குமாங்கடலைத் தேடிப் போயி ருக்கா. 'நல்ல வேளை உடல் கிடைச்சதோ பிழைச்சா. ஆளே காணாமல் போனால் ஊர் என்னென்னவோ கட்டி விட்டிருக் கும்டி.. 'நீ சொல்றதையும் மறுப்பதற்கில்லை. எப்படியோ ஒரு நியாயம் சாவிலும் வாழ்வு தேடிக் கண்டு பிடிச்சுக் கொடுத்துட்டே' ஏண்டி போனதுதான் போனாள் கல் கல்லா நகையை யும் மாட்டிண்டு கிளம்பிட்டாளே! பொண்ணுக்கு வெச்சுட்டு போனால் ஆகாதா? அதுவும் கிளி மாதிரி எப்படியடி வயசு வந்த பொண்ணு, வயசு வந்த பிள்ளையையும் விட்டுட்டுப் போக மனசு வந்தது? வசனமேயிருக்கு கோடித்துக்கம்குழந்தை முகத்திலேன்னு. அதுவும் பொய்த்துப் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/21&oldid=870338" இலிருந்து மீள்விக்கப்பட்டது