பக்கம்:மீனோட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளசி அகண்ட மணலைக் கண்டதும் பாப்பாவுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அதுவரை சமத்தாய் அப்பா கையைப் பிடித்துக் கொண்டு வந்தவள் திடீரென அவன் பிடியினின்று விடுவித்துக் கொண்டு, குறுக்கே விழுந் தடித்து ஓடினாள். ஒரு சைக்கிள் அவள் பாவா உராய்ந்து சென்றது. அதைச் சவாரி செய்பவனின் மொழிகள் காற்றோடு அடித்துக் கொண்டு போயின. கட்ச் சேர்ந்து அவனும் சபித்தான். ஆனால் பாப்பாவுக்கு அதெல்லாம் கேட்கவில்லை. மணலைக் கைகளாலும் கால்களாலும் வாரியிறைத்துக் கொண்டு ஓடினாள். - 'அடி பாவி யார் கண்ணிலாவது விழப்போறதுடீ என்று பின்னாலிருந்து கத்தினான். 'இல்லேப்பா’!-என்று சொல்விக் கொண்டே இன்னமும் அதிகமாய் இறைத்துக் கொண்டு ஓடினாள். அவள் வெறியைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பு வந்தது. வளர வளர, பாப்பா, அவள் அம்மாவையே உரித்து வைத்தாற்போல் ஆகிக்கொண்டு வந்தாள். அதே சிவப்பு, அதே மூக்கு, அதே மாதிரி செம்பட்டை மயிர், அதே அடங்காத்தன்மையும் பிடிவாதமும். ஒன்று செய்யாதே என்றால் அதைத்தான் கங்கணம் கட்டிக் கொண்டு செய்வாள். அவளைப் பார்க்கை யில் சந்தேகம் அடிக்கடி தோன்றும் குணங்கள் பழக்க தோஷமா, அல்லது ரத்தத்திலேயே ஊறினவையேதானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/23&oldid=870342" இலிருந்து மீள்விக்கப்பட்டது