பக்கம்:மீனோட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 23 முக்கிய காரியமாய் கிளம்பிக்கொண்டிருப்பான். "எங்கேப்பா போறே?’ அச்சமயம் எரிச்சலாய் வரும். மறு சமயம், அமைதியாக, அப்படியெல்லாம் கேட்கப்படாது பாப்பா-’ என்று மடி மேல் வைத்துக் கொண்டு புத்தி சொல்கையில், 'சரி தான். நீ போறப்போ கேக்கலே, ஆனால் நீ எங்கே போறே?’ என்று கேட்கையில், ஆசையில் கடித்துத் தின்று விடலாம் போல் இருக்கும். மஹா துஷ்டை. இருந்தாலும், இப்போதைக்கு வண்டி, காடி பயமில்லை. அலையண்டை போகாதவரை அவளை இஷ்டப்படி விளையாட விடலாம். ஆகையால் அன்று அவனுக்கு வந்த கடிதத்தை எடுத்து, மணலில் நடந்து கொண்டே மறுபடியும் படிக்க ஆரம்பித்தான். மனம் ரொம்பவும் வேதனையடைந் திருந்தது. சிற்சில பகுதிகள் சட்டுசட்டெனக் கண்ணிற்குப் பட்டன. -'பாப்பாவை இங்கே கொண்டு வந்து விட்டுவிடு. பொம்மனாட்டி வளர்த்த பிள்ளையும் புருஷன் வளர்த்த பெண் குழந்தையும் இதுவரை எப்பவுமே உருப்பட்ட தில்லை......... பாப்பா இப்போ என்கிட்டேதான் இருக் கணும். ஏதோ நாலு காசு சம்பாதிக்கறேன்னு சமையலுக்கு ஆளைப் போட்டுண்டா ஆயிடுத்தா? நீ உன் மனசிலே என்னத்தை வெச்சிண்டிருக்கேன்னு நான் என்னத்தைக் கண் டேன்? எப்பவுமே இப்படி இருக்க முடியுமா? முடியற வயசா? உனக்கு உன் குழந்தையைப் பிரிய மனசு இருக்காது. ஆனால் எனக்கும்தான். அப்படியிருக்கு. நான் என்ன பண்ண முடியறது? அது அது பெருத்துப் போச்சு; நாலும் நாலு இடத் திலே சிதறிக் கிடக்கு. நாலுவிதமாயிருக்கு. சொன்னதைக் கேக்கறதா? இந்த வயசிலே நானும்தான் என்னத்தைச் செய்ய முடியறது?” "அப்பா-அப்பா- அவன் சிந்தனைகள் கலைந்தன. பாப்பா கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுது கொண்டே வந்தாள். முகம் தக்காளிப் பழமாய்ச் சிவந்துவிட்டது. என்ன? என்ன?"மண்ணு-’ "கடன்காரி, சொன்னால் கேட்கறையா? அவள் முகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/24&oldid=870345" இலிருந்து மீள்விக்கப்பட்டது