பக்கம்:மீனோட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மீனோட்டம் தைப் பிடித்துக் கொண்டு கண்களில் ஊதினான். "அப்படியில்லை- என்று ஒரு குரல் தடுத்தது. சிரித்துக் கொண்டு ஒருத்தி நின்றாள். இங்கே வாபாப்பா-’ என்று குழந்தையைப் பிடித்துத் தன்பால் இழுத் தாள். தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக் கொண்டு, அவள் பாப்பாவின் கண்ணுள் ஊதுகையில், திடீரென அவள் செய்கை அவனுள் ஏதோ பொத்தானை அமுக்கி, மனக் கதவுகள் ஒன்றிற்குள் ஒன்று திறந்து கொண்டே போயின. -யார்-நீயா?” குனிந்த நிலையிலே அவள் அவனை நிமிர்ந்து பார்க்கை யில், அவள் விழிகள் கூத்தாடின. “நீ நீயானால், நான் நான்தான்பாப்பா சரியாய்ப் போயிடுத்தா?-’’ பாப்பா ஆம் எனத் தலையைப் பலமாய் ஆட்டினாள். 'சரி வா, மடியிலே உட்கார்-உன் பேர் என்ன?” o என்றாள். என்ன "பாப்பா!-’’ 'ஒஹோ-நீ நீ, நான் நான், பாப்பா பாப்பாவாக்கும்அம்மா எங்கே பீச்சுக்கு இன்னிக்கு வரலேயா?” பரீrையில் பதில் சொல்லும் பையனைப் போல் பாப்பா தன் அப்பாவை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே, 'அம்மா இல்லே-’ என்றாள். ஊருக்குப் போயிருக்காளா?” "செத்துப் போயிட்டா-' "ஐயோ!-’ அவள் குழந்தையை அப்படியே அனைத்துக் கொண்டாள். அவனுக்கு லேசாய் மாரை வலித்தது. எதற்கு யார் மேல் என்று நிச்சயமாய்த் தெரியாமல் சிறு கோபம் கூட உண்டாயிற்று. ‘பாப்பா, போய் விளையாடு- என்றான். பாப்பா அணைப்பிலிருந்து நழுவி சிட்டுக்குருவியாய்ப் பறத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/25&oldid=870347" இலிருந்து மீள்விக்கப்பட்டது