பக்கம்:மீனோட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 'அடேயப்பா, எத்தனை நாட்கள்' என்றான். அவள் தலையை யசைத்தாள். "ஆனால் நீ மாறவில்லை-' வேதங்கினால் தானே மாற முடியும்?” என்றாள். நீ மாறியிருக்கிறாய்-’ என்றாள் மறுபடியும். ஆம், நான் வதங்கியிருக்கிறேன்-' என்றான். மார்புள் மறுபடியும் முனுக் முனுக்கென்றது. சட்டென ஏதோ நினைப்பெடுத்தவனாய் துசி ஊதி ஊதி உனக்கு ரொம்பவும் பழக்கமில்லையா?' என்று கோபத்துடன் முணுமுணுத்தான். உள் குமுறலின் வேதனை இன்னமும் தணிந்தபாடில்லை. ஒரு கணம் திகைத்தவளாய், திடீரென்று அர்த்தமான வளாய் கையைக் கொட்டி வாய்விட்டுச் சிரித்தாள். ஆனால் அவனுக்குச் சிரிப்பு வரவில்லை. சீற்றம்தான் பொங்கி யெழுந்தது. - "உனக்கு எல்லாமே சிரிப்புத்தானே!” என்றான். அவள் மறுபடியும் சிரித்தாள். ஆனால் முதல் சிரிப்பின் வெள்ளை இதில் இல்லை. பிழைப்போ சிரிப்பாய்ச் சிரிக்கும் பிழைப்பு. வெறும் சிரிப்புக்கூட கூடாது?’ என்றாள். மறுபடியும் ஏதோ ஞாபகம் வந்தவளாய் உன் அப்பா செளக்கியமா? என்றாள். புன்னகை அவனையும் மீறியது- இல்லை காலமாய் விட்டார்- என்றான். 'அடடா! எல்லாம் போன கதையாகவேயிருக்கிறதே!' என்றாள். ஆனால் அனுதாபத்துடன் இல்லே, அவர்தான் போனார்-கூட அவர் மீசையும்போச்சே!”

போலீஸ் மீசை' என்றான். "அவர் போலீஸ் என்று அதுவும் எங்களுக்கு மறந்துடுமா என்ன? உன் கண் தூசியை நான் ஊதின மூன்றாம் நாள், எங்களை ஊரை விட்டே ஊதி விட்டாரே! எங்கள் முதலாளி அவரை ஒரு நாளும் மறக்கவில்லை-'

'பரவாயில்லை. எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாய்” மறுபடியும் அவள் சிரித்தாள். மீ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/26&oldid=870349" இலிருந்து மீள்விக்கப்பட்டது