பக்கம்:மீனோட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மீனோட்டம் முண்டோ? அங்கு அப்பொழுது நம்மிருவரைத் தவிர வேறு யாரும் இல்லையே! அப்போது கூட-”

வெட்கம்!-’ என்றாள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு. அவள் கண்களில் குறும்பு குதித்தது. அவன் காதில் வாங்கிக் கோள்ளாமலே மேலே சொல்லிக் கொண்டே போனான். தொட்டுத் தொட்டுத் தன்னைப் பாடுபவனைத் தன் லுடனேயே இழுத்துச் செல்லும் ராகம் போல் இருந்தன அவன் நினைவுகள். அவைகளுக்குப் போடும் சுருதிபோல் அவர் களிடையில் அலைகளில் ஒசை இழைந்தது.

'அச்சமயம் ஒரு தூசியோ பூச்சியோ பறந்து வந்து என் கண்ணுள் விழுந்தது. நான் கண்ணைக் கசக்கிக் கொண்டு தவித்தேன். நீ உடனே என்னிடம் வந்து என் தலையைப் பிடித்துக் கொண்டு என் கண்ணுள் ஊதினாய்- பேச்சு அந்த இடம் வந்ததும், தடுமாறி நின்று விட்டது. அவன் அப்பொது அங்கு இல்லை. விவரித்து வரும் அந்த நிமிஷத்தில் அமிழ்ந்து விட்டான். அவன் கட்டிக் கொண்டே வந்த நினைவுத் தொடர்பைத் துண்டிக்காமல் காப்பாற்றுவது போல் அலைகளின் ஒசை, கனமாய் அவர்களிடையே சுருதி போல் இழைந்தது. 'அந்த நிலையில் நான் ரொம்பவும் அழகாயிருந்தேன் என்று சொல்லேன்” என்றாள் கிண்டலாய், புன்னகை புரிந்து கொண்டே. அவன் அவனில் இழைந்து இருக்கும் நிலையை அவள் வெகுவாய் அனுபவித்தாள். வெட்கத்தில் அவன் முகம் சிவந்தது. அவன் அவஸ் தையைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆனந்தம் அதிகரித்தது. இரக்கமில்லாமல் வாட்டிக் கொண்டே போனாள். ‘என்னை வெட்கங் கெட்டவள் என்றுதான் சொல்லேன்- என்றாள். அந்த மாதிரி, முன்பின் பழக்க மில்ல்ாமில், நானே வந்து உன்னைத் தொட்டு உன் முகத்தைப் பிடித்து கண்ணுள் ஊதினேனே!” பேச முடியாமல் தவித்தான். அரங்கத்தில் நடிக்கும் எங்களுக்கு எல்லாமே சகஜம் தான். நாங்களாக நடிக்கும் வெட்கம் தவிர சுய வெட்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/29&oldid=870355" இலிருந்து மீள்விக்கப்பட்டது