பக்கம்:மீனோட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 29 எங்களுக்கு ஏது? ஆனால் அச்சமயம் என் மனதில் உன்மேல் சூழ்ச்சியொன்றும் கிடையாது. உன் கண்ணில் தூசி விழுந்தது-நீ அவஸ்தைப் பட்டாய்-நான் ஊதினேன்அவ்வளவுதான்-' என் கண் துரசியை மார்புள் ஊதிவிட்டாய்-'என்றாள். குரல் தழதழத்தது. மார்புள் மறுபடியும் முனுக்முணுக் கென்றது. - 'ஏதேது, ஒரு நாள் நாடகம் பார்த்ததிலேயே வசனங் கட்டக்கூட வந்து விட்டார் போலிருக்கிறதே-’ அவன் முகத்தில் ஜூரம் அடித்தது. உனக்கு எல்லா வற்றையுமே நடித்து நடித்து பொய்மையிலேயே பழகிப் பழகி உண்மையை அடையாளம் கண்டு கொள்ளக் கூட மறந்து விட்டது- கோபம் தொண்டையை அடைத்ததால் ஒரு முறை கனைத்துக் கொண்டான். - 'கனைப்புக் கூட உன் அப்பா மாதிரியே இருக்கிறதே!-- என்றாள். அப்பொழுது நம் பின்னாலிருந்து வந்ததே, அந்த கனைப்பு சப்தமாகவே இருக்கிறதே! திடீர் என்றுநம் பின்னால் ஆள் முளைத்திருந்ததைப் பார்த்தும், எனக்கே தாக்கிவாரித் தான் போட்டது. அப்பொழுது உன் அப்பா என்று எனக்குத் தெரியுமா? ஒரு புது நாடகத்துக்கு ஒத்திகை ஆரம்பிக்கிறதுக்கு முன்னால், கதை புரிவதற்காக மூலப் புஸ்தகத்தை நாங்கள் படிப்பது உண்டு. பெரிய எழுத்து-ஐதீகப் படங்களுடன் என்று இருக்கும். அவைகளில் இருக்கும் மதுரை வீரன், காத்த வராயன் பொம்மை மாதிரியிருந்தார் உன் அப்பா. வாட்ட சாட்டமாய், குத்து மீசையும், மேட்டு விழியும், வெள்ளை முழியிலே கோபத்திலே ஆடும் கறுப்பு முழியும் அதுவுமாய் ஆள் பார்க்கக் கொஞ்சம் அச்சமாய்த்தான் இருந்தார். உனக்குக்கூட முகம் வெளுத்து விட்டது.” 'நான் அப்பாவுடன் எப்பவுமே நெருங்கிப் பழகிறது இல்லை.” - "ஆனால் அவர் என்னைத்தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்னம்மா-நீ யார்?' என்றார். நான் புது நாடகக் கம்பெனி, உனக்கு இங்கே என்ன வேலை?.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/30&oldid=870360" இலிருந்து மீள்விக்கப்பட்டது