பக்கம்:மீனோட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} மீனோட்டம் வேடிக்கை பார்க்க வந்தேன் ...” இல்லை ஒரு வேளை இதையும் நாடக மேடை என்று நினைத்துக் கொண்டாயோ என்று பார்த்தேன்-' 'உன் தகப்பனாருக்கு மரியாதை மீறாமலே அவமானப் படுத்த நன்றாய்த் தெரிகிறது-' "நான் ரொம்பவும் குழம்பிப் போயிருந்தேன். எனக்கு இப்பொழுது ஒன்றும் ஞாபகமில்லை- என்றான். 'நான் மறக்கவில்லை? இப்பொழுது வேடிக்கையாயிருந் தாலும் அப்பொழுது இல்லை. நான் ஒன்றுமே பேசவில்லை! 'ஏன் இன்னும் நிக்கறே? என்று அவர் போட்ட கர்ஜனையில் நான் அங்கு நிற்கவேயில்லை. ஒட்டம் பிடித்தேன்-அப்புறம் என்ன நடந்தது?’ 'என்னை உன்னைப் பற்றிக் கேட்டார். ஆனால் எனக்கு என்ன தெரியும்? உன் பேர் கூடத் தெரியாதே! பிறகு நாடகக் கம்பெனி பேரை மாத்திரம் கேட்டுக் குறித்துக் கொண்டு என்னை ஒரு தடவை துருவியெடுக்கிறாப் போல் பார்த்து விட்டு நீ போ' என்று விட்டார்-' கையைக் கொட்டிக் கொண்டு அவள் வாய் விட்டுச் சிரித்தாள். போனது நீ இல்லை, நாங்கள் தான். அன்றையிலிருந்து மூன்று நாட்களுக்குள் உன் த்கப்பனார் போலீஸ் உடுப்பில் கொட்டகைக்கு வந்து, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, அது சரியில்லை இது சரியில்லை, என்று இல்லாத குற்ற மெல்லாம் பாராட்டி லைசென்சையே ரத்தாகும்படி செய்து எங்களை ஊரைவிட்டு விரட்டி விட்டார். கம்பெனி அவ்வளவு சுருக்க ஊரை விட்டுப் போனதற்குக் காரணம் அது இல்லை. நீயும் நானும்தான் என்று என் முதலாளியிடம் நானும் காட்டிக் கொள்ளவில்லை. எனக்கு ஏகப் பயம். உன் தகப் பனாருக்கு அவர் பயம், நான் இன்னும் தங்கியிருந்தால் பிள்ளை கெட்டுப்போய் விடுவானோ என்று. அது தானே' இருக்கலாம் என்றான் மறதியுடன் எங்கோ பார்த்துக் கொண்டு, நீ ஆனால் ஒரு பெரும் ஜூரம் மாதிரிதான். அப்புறம் ரொம்ப நாள் என்னுள் அடித்துக் கொண்டிருந் தாய்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/31&oldid=870362" இலிருந்து மீள்விக்கப்பட்டது