பக்கம்:மீனோட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மீனோட்டம் வற்றையும் என் பெயருக்கு எழுதி வைத்து விட்டுப்போன தின்ால் நான் இப்பொழுது செளக்கியமாயிருக்கிறேன்.”

  • கம்பெனி?’’ "அதெல்லாம் எங்களுக்குக் கலியாணம் ஆனவுடனே முடி யாகி விட்டது. எனக்கு மறுபடியும் ஊர் ஊராய்ப் போய்த் திரிந்து கொண்டிருக்கும் பிழைப்பு அலுத்து விட்டது-’’

அவன் அவள் அபிப்பிராயத்தை ஆமோதிப்பது போல் தலையை அசைத்தான். ஆனால்- என்றாள் மெதுவாய். “என்ன-’’ "ஆனால் அந்த பழைய துரு துருப்பு இன்னமும் அடங்க வில்லை. முன்னைவிட இப்பொழுது எவ்வளவோ செளக்கிய மாய்த் தானிருக்கிறேன். இஷடப்பட்டதை வாங்கிக் கொள்ள முடிகிறது. இஷ்டப்பட்டதைச் செய்ய முடிகிறது, இருந்தும் சில சமயங்களில் பொழுது தான் போக மாட்டேன் என்கிறது. காலம் பாறையாய்த் தலைக்கு மேல் தொங்குகிறது. அப்போ தெல்லாம் இருந்த பொழுது போதாது-’ அப்பா-அப்பா-ஆத்துக்குப் போவோம்- என்று பாப்பா ஒடி வந்து பேச்சைக் கலைத்தாள். அட, இருட்டி விட்டதே- என்றான் ஆச்சரியத்துடன். நேரமானதே அப்பொழுதுதான் தெரிந்தது. அதுக்குள்ளேயே போகணுமா என்ன? என்றாள். 'பாப்பா இங்கே வா உனக்கு நான் முந்திரிப் பருப்பு வாங்கித் தரேன்-என் மடிலே படுத்துக்கோ-' என்று குழந்தையைக் கையைப் பிடித்து இழுத்தாள். ஆனால் பாப்பாவா ஏமாறு கிறவள். அவளை உதறிக் கொண்டு அப்பா சட்டையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள். 'வா அப்பா போகலாம்-' என்றாள் அழுகைக்கு அடிகோலும் முனகலில். 'அது ஒரு பெரும் சண்டி-பாப்பா ஏதாவது நினைத்துக் கொண்டு விட்டால் அப்புறம் அவள் எண்ணத்தை மாற்றவே முடியாது -” என்று சொல்லிக் கொண்டே, மேல் துண்டை உதறிக் கொண்டே எழுந்திருந்தான். இருவரும் சற்றுநேரம் தூரத்து சமுத்திர நீலத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/33&oldid=870366" இலிருந்து மீள்விக்கப்பட்டது