பக்கம்:மீனோட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 33 பார்த்துக் கொண்டு மெளனமாய் நின்றனர். செளகரியப் பட்டால் வீட்டுப்பக்கம் வாயேன்-அடை யாறில் இருக்கிறேன்-இந்தா என் விலாசம்-’ என்றாள் ஏதோ சாதாரணமாய்ப் பேச்சு வாக்கில் சொல்வதுபோல். ஆனால் அந்த அனாயசம் எவ்வளவு கஷ்டப்பட்டு வர வழைத்துக் கொண்டதென்று அவள் குரலின் ஜாக்கிரதை உணர்த்தியது. அதற்கென்ன? என்று பதில் சொல்லி விட்டு, பாப்பா வின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். இரண்டொரு முறை திரும்பிப் பார்த்தான், அவள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள். சரிப்பிட்டு விட்டு இப்பொழுது அவன் அறையில் உட் கார்ந்து கொண்டிருந்தான். பாப்பா அவன் படுக்கையில் விளையாடிக் கொண்டேயிருந்து விட்டு அப்படியே கண் அயர்ந்து விட்டாள். மொட்டுப்போல் வாய் சற்றே திறந்த வண்ணம், அரைத் துணி போன இடம் தெரியாமல் கையை யும் காலையும் விசிறிப் போட்ட வண்ணம் அவள் துரங்கு வதைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. குழந்தைகள் பாடு நிம்மதி, பேசிக் கொண்டேயிருக்கின்றன! அப்படியே தூக்கத்துள் நழுவி விடுகின்றன. விழிப்பதும் அப்படித்தான். மேஜையில் அவன் எதிரில் ஒரு கடிதம் பிரித்துப் போட்டபடியிருந்தது. சாயங்காலம் கொடுக்க மறந்துட் டேன் என்று சமையற்காரப் பாட்டி, இப்பொழுதுதான் அவள் வீட்டுக்குப் போகுமுன் கொடுத்து விட்டுப் போனாள். அவன் மாமனாரிடமிருந்து வந்திருந்தது. மேம்பாடாய்ப் பார்க்கையிலேயே ஆங்காங்கு சில வார்த்தைகள் தெறித் திருந்தன. 'மாப்பிள்ளைக்கு அனேக ஆசீர்வாதம், உங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/34&oldid=870368" இலிருந்து மீள்விக்கப்பட்டது