பக்கம்:மீனோட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மீனோட்டம் எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தா லும் நான் எழுதும் விஷயத்திற்குப் பாப்பாவை என் மனச் சாகதியாய் வைத்துக் கொண்டு எழுதுகிறேன். 'உங்களுக்குக் கொடுத்தபின் எனக்கிருப்பது ஒரு பெண் தான் என்றாலும் அவளுக்கு வரன் தேடித் தேடி இன்னமும் தகைந்த பாடில்லே. ஒன்று ஒத்துக் கொண்டால் ஒன்று ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது. எனக்கும் அலுத்து விட்டது. வயதும் ஆகிவிட்டது. தவிர உங்களை விட சிரேஷ்டமாய் யார் எங்களுக்குக் கிடைக்கப் போகிறார்கள்? அவளையும் ஜாடை மாடையாய் அறியப் பார்க்கையில், இந் தச் சம்பந்தத்தைத் தான் விரும்புகிறாள் என்று தெரிகிறது. "ஆகையால் உங்கள் தாயாருக்கு எழுதியிருக்கிறேன். அவளை நேரிலும் போய்ப் பார்க்கப் போகிறேன். இருந்தா லும் இந்தக் காரியத்திற்கு உங்கள் சம்மதமில்லாமல், மற்ற வர் சம்மதம் அத்தனையுமிருந்தும் என்ன பிரயோசனம்? 'மாப்பிள்ளை! உங்களுக்கு இந்த விஷயம் எப்படிப் பிடிக்கும் என்று நான் எப்படிச் சொல்வது? முதல் சம்பந்தத் தில் உங்களை நாங்கள் ஏமாற்றி விட்டோம் என்ற எண்ணம் இருந்தாலும் இருக்கலாம். அதனால் மெத்த கோபம் இருந் தாலும் இருக்கலாம். ஏன் எனில் என் மூத்த பெண் முழுக்க முழுக்க சமத்தாய் இருந்திருப்பாள் என்று நான் சொல்லிக் கொள்ள முடியாது. முதல் குழந்தையாய், செல்லக் குழந் தையாய், வளர்ந்து விட்ட அவளே ஒரு தினுசு தான். சுற்று முற்றுமிருப்பவர்கள் எல்லாம் கலியாணம் ஆகி, குடும்பத்தில் அடிபட்டால் சரியாய்ப் போய் விடுவாள் என்று சொன்னார் கள். ஆனால் காரிய பூதத்தில் அப்படி நேரவில்லை.” “அவள் அப்படி யானதினால், அவள் தங்கையும் அப்படியென்று நீங்கள் நினைக்கலாகாது. அத்தனைக்கத் தனை என் அடுத்த மகள் அடக்கம் பொறுமை, குணங்கள் எல்லாமே வேறுபாடுதான். ஒரே வயிற்றில் பிறந்த இரண்டும் இரண்டு விதமாயிருப்பது விதியின் வேடிக்கை என்பது தவிர வேறு என்ன சொல்வது? என் பெண்ணின் பெருமையை நானே அடித்துக் கொள்வது அழகல்ல. இருந்தும் நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/35&oldid=870370" இலிருந்து மீள்விக்கப்பட்டது