பக்கம்:மீனோட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 39 போல் ஏறியது. மாற்றி மாற்றி. இரக்கமில்லாமல் நெருப் பிலும் நெய்யிலுமாய் அவனை வதக்கினாள். கடைசிவரை அவள் கார்க்கோடகிதான். திடீரென்று அவள் முகத்தில் கபடம் புகுந்தது. எங் கேயோ பார்த்துக் கொண்டு, பகையானாலும் பத்துநாள் பாக்கறதுண்டு- என்றாள். ‘என்ன சொல்கிறாய்? என்றான், ஒன்றும் விளங்காமல்? ஆனால் அவளுக்கு நினைவு அலைய ஆரம்பித்து விட்டது, "பாப்பா இப்பவே என்னிடம் வரமாட்டேன் என்கிறாள்இவள் சித்தி இடுப்பிலேயே சவாரி பண்ணிண்டிருக்காள்மற்றவாள் எல்லாம் எங்கே? நீங்கள் எப்போ வந்தேள். அவளை வரச் சொல்லுங்கோன்னா-” அப்புறம் அவளுக்குச் சுய நினைவு வரவில்லை! 'பகையானாலும் பாக்கறதுண்டு- அவள் அர்த்தம் நாளாக ஆக அவனுள் ஊறஊற பதைப்பாயிருந்தது. கடைசி வரை அவள் கார்க்கோடகிதான். செத்த பிறகுகூட ஏளனத் தினாலேயே அவனை அவள் ஆள முயல்வதும், அவனுள் ளேயே அவனை அவனாலேயே அவள் கட்டுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்கையில்............ - நினைவுகளிலிருந்து திடுக்கென விழித்தெழுந்தான். அறையில் கூட்டிலடைபட்டது போல் முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டான். எதிர் வீட்டுப் பிடில் சாதகத்திலிருந்து அந்தப் பாழும் பல்லவி திரும்பத் திரும்பத் தன்னையே தோற்றுவித்துக் கொண்டிருந்தது. கோபத்துடன் ஜன்னல் பக்கம் மறுபடியும் திரும்பினான். அதில் பதிந்திருந்த கண்ணாடியில் ஒரு உருவம் சிரித்துக் கொண்டு எழுந்தது. சமுத்திரக் கரையில் இன்று சந்தித்த வளின், வெள்ள்ைக் கழுத்தும், கட்டு உடலும் விழிகளும் கண்ணாடியிலிருந்து அவனை அழைத்தன. 'செளகரியப் பட்டால் வீட்டுப் பக்கம் வாயேன்!-' அவள் மேல் இருந்த புனுகின் மணம் திடீரென அறையில் கமழ்ந்தது. அவன் தன் வசமில்லை. உள் தூசி உறுத்த ஆரம்பித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/40&oldid=870382" இலிருந்து மீள்விக்கப்பட்டது