பக்கம்:மீனோட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மீனோட்டம் விட்டது. அது இன்னும் போகவில்லை. புத்தம் புதிதாய்க் குத்தியது போல், பழைய வாசனையின் புது வேகத்துடன், விண் விண் எனத் தெறிக்க ஆரம்பித்தது. கைக் கடியாரத் தைப் பார்த்துக் கொண்டான். இன்னும் நேரமாகவில்லை. அவளை யழைத்துக் கொண்டு ஒரு சினிமாவுக்கோ டிராமா வுக்கோ போகலாம்-செளகரியப் பட்டால்-அந்த வார்த்தை யில் தான் எவ்வளவு சூட்சுமமான அழைப்பு: சட்டென ஜிப்பாவை மாட்டிக் கொண்டான். கண்ணாடி யில் பார்த்துக் கொண்டு அவசரமாய் இருமுறை தலைமயிரை சீவி விட்டுக் கொண்டான். பையில் பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். எங்க்ேப்பா போறே?” 'உம்-?’ கதவின் குமிழின் மேல் வைத்த கை அப்படியே நின்றது. ஒரு மூச்சு திணறி வந்தது, களவும் கையுமாய்ப் பிடிபட்டவன் போல் மீளாத இடத்திற்குப்டோனவனை அக் கேள்வி திரும்ப அழைத்தது. "குளிர்ரது அப்பா-' அவள் சொன்னது அவனுக்குச் சரியாய்க் காது கேட்க வில்லை. ஒரு நிமிஷத்தின் நிரந்தரம் அவனைத் தன்னுள் அமிழ்த்திக் கொண்டிருந்தது. “குளிர்ரது அப்பா- என்று குழந்தை மறுபடியும் முனகி னாள். அப்பொழுதுதான் அவன் தன்னில் மீண்டான். சொக் காயைக் கழற்றி எறிந்தான். தன் கோட்டையெடுத்து குழந் தைக்கு மாட்டினான். பாப்பா அப்பொழுது பார்க்க வேடிக் கையா யிருந்தாள். அவளைப் பிடித்த ஜூரம் அவளை விட்டதின் அடையாள மாய். முகத்தில் வேர்வை முத்து முத்தாய் நின்றது. ஜன்னல் கதவைத் திறந்தான். காற்று மோதியது. அப்பாடா' பல்லவிக் கடுத்த அடி அப்பொழுது தான் எதிர் வீட்டுப் பிடியி லிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. 'அப்பா என்கிட்டவந்து படுத்துக்கோயேன்-என்னை அணைச்சுக்கோயேன்.-'என்று குழந்தை கொஞ்சினாள். 'இதோ வந்துவிட்டேன்-”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/41&oldid=870384" இலிருந்து மீள்விக்கப்பட்டது