பக்கம்:மீனோட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 41 அன்று அவனுக்கு வந்த கடிதங்களுக்கு அவசர அவசர மாய்ப் பதில் எழுதினான். நாலு நாலு வரிகள் தாம். உடனே அவைகளைக் கொண்டு போய் வாசற்படியில் நின்ற தபால் பெட்டியில் போட்டு விட்டு வந்தான். அவனின்று ஒரு பெரு மூச்சுக் கிளம்பியது. 'பாப்பா-உன் சித்தியும் பாட்டியும் வரப்போறா!-” என்றான், பக்கத்தில் படுத்துக் கொண்டு மேலே போர்வையை இழுத்துக் கொண்டே. "எப்போ அப்பா?-’’ 'சுருக்க-’’ பாட்டியும் சித்தியும் வந்ததும், பாட்டி தன்னை வேடிக்கை பார்க்க அேழைத்துக் கொண்டு போகப்போகும் இடங்களைப் பற்றியும், சித்தி தனக்கு தைத்து உடுத்தப் போகும் புதுப் புது சொக்காய், கெளன்களைப் பற்றியும்,தான் இருவருக்கும் தன்; சொப்புகளிலும், அன்று கடற்கரையில் பொறுக்கி வந்த கிளிஞ்சல்களிலும் சமைத்துப்போடப்போகும் பட்சணங்களைப் பற்றியும், பாப்பா, தன் அப்பாவிடம் வெகு நாழி பேசிக் கொண்டேயிருந்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/42&oldid=870385" இலிருந்து மீள்விக்கப்பட்டது