பக்கம்:மீனோட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசடு வீடு நெருங்குகையில் எனக்குத்தான் கண் இருட்டறதா, அஸ்தமிச்சுத்தான் போச்சா? இரண்டு கைகளிலும் பைகளின் சுமைக் கனம் கீழுக்கு இழுத்தது. அஸாமி எப்பவோ வந்திருக்கனும், அவர் வரவேளைக்கு நான் வீட்டில் இல்லாட்டா, அவருக்குக் கோபம் மூக்கைப் பொத்துக்கறது. ஆபீளிலிருந்து வந்தவுடன்-மரக்கடையில் கணக்கெழுதினாலும் நம்மைப் பொறுத்தவரை கச்சேரி தானே.--கோட்டைக்கழட்ட உதவி, சிரமம் விசாரிச்சு, விசிறி எதிரே நிக்கணும். கொஞ்சம் சீலம் தான். ஆனால் அதைவிட எனக்குக் கைக்காரியமும் காலைச் சுத்தற குஞ்சானும் குளுவானும் என்ன தட்டுக் கெட்டுப் போறது? இது ஒண்ணுலே தான் ஆண்டவன் தயவு. ஒண்ணோடு விட்டான். அபயம்னு பேர் வெச்சதும் அபயம் தந்துட்டான். கைச்சுமையை வாங்கினால் தேவலை, ஜயா,ஈளிச் சேரிலே சாஞ்சுண்டு பேப்பருக்குப் பின்னாலே ஒளிஞ்சுண்டால் என்னை எங்கே கண்ணிலே படும்? பட்டாலும் மன்னன் நகர்மாட்டான். இந்தப் போஸ் கொடுத் தாலே, ஐயா படுகோவத்துலே இருக்கார். உள்ளே வந்து பைகளை இறக்கி, அருகே சுவர் மேல் சாய்ந்தாள், "உஸ் அப்பா வரவர ரொம்ப சிரமமாயிருக்கு. ப்ளாஸ் கிலே ஊத்திவெச்சிருந்தேனே, சாப்பிட்டேளா? அபயா இல்லே? நீங்கள் வந்தாச்சுன்னு எங்கானும் விளையாட ஓடிப் போயிடுத்தா? லர வர அடங்கவே மாட்டேன்கறா வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/43&oldid=870386" இலிருந்து மீள்விக்கப்பட்டது