பக்கம்:மீனோட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசடு 43 நேரமாச்சா? பேச மாட்டேளாக்கும்! நான் என்ன செய்ய? நாளை உலைக்கு ஒரு மணி அரிசி லேது. இந்த மாலம் என்னவோ இப்பவே எல்லாமே தட்டுப்பாடு. இன்னும் நாலு நாள் பொறுத்தும் ஆச்சி தானே வரணும்? வரமாத சாமானை இப்பவே வாங்கிட்டுப் போயிடுஹளேன்! பற்று எளுதற சரக்குக்கு மாதம் முதலேது? கடைசி ஏது? கன்னத் துள் நாக்கை அடக்கிண்டு நாட்டான் நமுட்டாய்ச் சிரிக் கிறான் சிரிச்சுட்டுப் போறான், வாங்கிண்டு வந்துட்டேன். தூக்கத்தான் முடியல்லே கொஞ்சம் விளக்கைப் போடுங் களேன். மாட்டேளா? இன்னிக்கு சோதனையில் நீங்களும் சேர்ந்துண்டுட்டேளாக்கும்! எழுந்து ஸ்விச்சைத் தட்டி விட்டு உட்கார்ந்து. ஒவ்வொரு பொட்டலமாய் எடுக்க ஆரம்பித்தாள். - பொட்டலங்களைப் பிரிச்சு, சாமான்களை எடுத்து வைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் இருக்கு.” (பல்லைக் கடித்துக் கொண்டு; என்னதான் பேசு வாளோ?) "ஆமாம் அப்படித்தான். அது என் சுபாவம்னு விட்டுடுங் களேன்! எனக்குப் பேசணும். உங்களுக்குப் பொருமனும், கடவுள் எப்படி ஜோடி சேர்த்து வெச்சான் பார்த்தேளா? பொரும பொரும உங்களுக்குத்தான் வேக்காடு. என்னைப் பாருங்கோ. மனசுலே இருக்கறதை அப்பப்போ கொட்டிட்டு அத்தோடு மறந்துட்டு வளையவரேனோ பிழைச்சேன். உங்கள் வசைகளை சட்டை பண்ணினேனோ அதுகளின் கொக்கியில் மாட்டிண்டு எப்பவோ தொங்கியிருக்கணும். இருப்பது ஒரு உசிர், எத்தனை தடவை தொங்க முடியும்? அவன் புழுங்குவது அவனுக்குத் தெரியும். என் படிப்புக்கும் என் யோக்யதைக்கும் எனக்குக் கிடைத்திருக்கும் வேலைக்கும். யாரைக் குற்றம் சொல்வது? பானை பிடித்தவள் பாக்யம்னு அவள் மேல் தள்ளி விடலாமா? ஆனால் பிறந்ததிலிருந்தே என் ராசியும் ஏப்ராசிதான். ஆனால் இரண்டுமேவா இப்படி? துடைச்சு வாய்க்கணும்? விவாகங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக் கப்படுகின்றன. இது தேறுதலா? தீர்ப்பா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/44&oldid=870388" இலிருந்து மீள்விக்கப்பட்டது