பக்கம்:மீனோட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மீனோட்டம் அவனுடைய வெகுளித்தனத்தில் அவனுடைய உள் குமுறலைச் சீண்டிவிடுவது போல் ஏதாவது சொல்லுவாள். பார் பார் இப்போக்கூட ஏதோ கிண்டியா யெனம் பண்ணு கிறாள்! வர வழியில் அத்திம்பேரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கல்லே. கண்டிருந்தால் வீடுவரை கொண்டு விட்டிருப்பார். எங்சுேயோ அவசரமாப் போறார்? நான் தான் காரை எனக்காக நிறுத்த வேண்டாம்னு விட்டுட்டேன்.” இவளுடைய தங்கை ஆம்படையானின் கார்ப் பெருமையை இப்படியெல்லாம் எனக்கு இடிச்சாகனுமாக்கும்! தங்கை ஆம்படையான் எப்படி இவளுக்கு அத்திம்பேர் உறவாகும்? கட்டைகுட்டையா தொந்தியும் தொப்பையுமா என்னைவிடப் பெரியவர்ன்னா? எப்படியிருந்தால் என்ன? லக்ஷ்மி தாண்டவமாடறாள். இன்னிக்கு நகைக் கடையின் ஸ்டாக்கை எடுத்தால், நாலு தலைமுறைக்கு உட்கார்ந் துண்டே அழிக்கலாம். இத்தனைக்கும் வேலைக்குச் சேர்ந் தப்போ கணப்புச் சட்டியை குழலாலே ஊதத்தானாம். ஆனால் அவள் கொடுக்கணும்னு மனசு வெச்சுட்டாள்னா கூரையைக் கிழிச்சுண்டுதானே கொட்றாள்! ஏங்கிக் கிடக்கற வாளைக் கண்ணெடுத்தும் பார்க்கறாளா? அதுவும் பத்மா வீட்டில் காலை வெச்சதிலிருந்து கோழிப்பு என்று ஒரு பேரை யும் வாங்கிட்டாள். அப்புறம் கேக்கவும் வேணுமா? எல்லாரும் அவளை உள்ளங்கையில் ஏந்தறா புக்காத்துச் செல்லம் கிட்டி விட்டால் பிறந்தாத்துக்கு மேலே அங்கே சரியான கூட்டம். உறவு, ஒட்டு, வெட்டு, வேலையாள் எல்லாம் சேர்ந்து வேளைக்கு முப்பது இலை விழும் போல் இருக்கு. தயங்கும், தாங்கும், புண்யவானுக்கு மேலும் தாங்கும். ஆள் போட்டுத்தான் சமையல். 'ஹரிஹரா! ஹரிஹரா!!’ ஹரிஹரன் வெச்சதுதான் சட்டம், சமையல் காரன்.சாமான்காரன், இன்னிக்கு சாயந்திர பீச்சுக்கு சினிமா வுக்கு பாப்ளா தமுக்கடிக்கு கச்சேரிக்கு எந்த ரவிக்கையோடு எந்தப் புடவை சேரும் எனப் பெண்டுகளுக்கு ஆலோசகன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/45&oldid=870390" இலிருந்து மீள்விக்கப்பட்டது