பக்கம்:மீனோட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மீனோட்டம் யாருக்கும் பொதுவாய், பெற்றவயிறு எனும் யாக குண்டத் தில் ஆஹஅதி விட்டுக் கொண்டிருக்கிறோமா? பத்மாவே இப்படித்தான். பேச்சில் துடுக்கு, துணிச்சல் காரி. டோண்ட் கேர் மாஸ்டர். ட்ரைவர் காதில் பட்டால்? நான்தான் கவலைப் படுகிறேன். அவன் சிலையாய்ச் சமைஞ் சிருக்கான். பார்வை அவன் மூக்குக்கு நேராய் நெட்டுக்குத்தல். அதனாலேயே அவன் காதெல்லாம் இங்கேதான் தெரியறது. ஆனால் வாயடைச்சிருக்கு. இவளுக்கு முன்னாலிருந்தே இவாள் வீட்டில் இருக்கிறான். பிள்ளை குட்டிக்காரன். பிழைக்கத் தெரிஞ்ச்வன். இவன் வாங்கும் சம்பளம் என்னிலும் கூடுதலாயிருக்குமோ? அவன் சிந்தனைகளை, அவன் மூக்கின் கீழ் ஒரு கரம் நீட்டி வெடுக்கெனக் கலைத்தது. இளைத்த எலும்புக்கை. கட்டைவிரலுக்கும் இடையே ஏதோ பளிச் பளிச் 'இதெப் பாருங்களேன், நன்னாயில்லே?" ஆனால் அவன் அதைப் பார்க்க வில்லை. புஸ் புஸ்" என்று பொங்கிய ஒரு பரட்டைத்தலையைப் பார்த்தாள். ஒரு முட்டை எண்ணெய் வைத்து வாரினால்தான் என்ன? பற்கள் வரிசையாயினும், கன்னங்கள் ஒட்டிப் போயிருந் தமையால் பலகை பலகையாய்த் தெரிந்தன. கழுத்துவிண்டு விழுந்துவிடுமோ?-கழுத்தில் ஒரு நரம்பு அவசரமாய் அடித்துக் கொண்டது. - இன்று காலை பத்மா இப்படியா யிருந்தாள்? அவனுக் குத் திடீரெனப் பயங்கரமான ஆச்சர்யம். இது யார்? 'பார்க்க மாட்டேன்கறேளே? ப்ளாட்பாரத்தில் வித்துண் டிருந்தான். ஒரு ரூபா சொன்னான். எட்டனாவுக்குக் கேட் டேன். கொடுத்துட்டான்- இனி அவள் அவனைக் கவனிக்க வில்லை. அவள் கைப்பொருளில் அவள் லயித்து விடடாள். இனி அவனைப்பற்றி- யாரைப் பற்றியுமே அவளுக்கு அக்கரையில்லை. தானே வியந்து கொண்டு தானே பேசிக் கொண்டிருந்தாள். தனக்கே கேட்டுக் கொண்டு () "அபயாவின் விரலுக்கு சத்ேத.பெரிசாயிருக்குமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/47&oldid=870393" இலிருந்து மீள்விக்கப்பட்டது